Pre Approved Loan Details - பொதுவாக வங்கிகள் மற்றும் வங்கி செயலிகளில் வழங்கப்படும் Pre Approved Loan என்பது என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பொதுவாக லோன் என்றாலே ஆவணங்கள், கையெழுத்துகள், ஆதார், பான் கார்டு அது இதுவென்று அனைத்தையும் சமர்ப்பித்து விட்டு, அந்த சார்ஜ் இந்த சார்ஜ் என பிடித்து விட்டு கேட்ட அந்த தொகை ஆனது கையில் முழுவதும் வருவதற்குள் போதும் போதும் என்று ஆகி விடும், அதனால் தான் பலரும் லோன் என்றாலே வங்கி பக்கம் போகவே பயப்படுகின்றனர்,
ஆனால் தற்போது அப்படி இல்லை, நீங்கள் சம்பளம் வாங்கும் ஊழியராக இருந்தால், உங்களுக்கும் வங்கிக்குமான நம்பிக்கை தன்மை உறுதியாக இருந்தால், வங்கிகளே உங்களுக்கு Pre Approved Loan களை வாரி வழங்குகின்றன, இந்த Pre Approved லோன் குறித்து தெரிந்து கொள்ள நீங்கள் வங்கிக்கு தான் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை.
வங்கிகளில் அதிகாரப்பூர்வ செயலிகள் இருந்தால் போது, உதாரணத்திற்கு நீங்கல் ஒரு சம்பளதாரி என வைத்துக் கொள்வோம், ஒரு இரண்டு வருடங்களாக ஸ்டேட் பாங்க் கணக்கில் சம்பளம் பெற்றுக் கொண்டு இருக்கிறீர்கள், வரவு செலவு மற்றும் சிபில் எல்லாம் சரியாக வைத்து இருக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம், உங்களுக்கு இப்போது இரு 2 இலட்சம் அவசர தேவை இருக்கிறது.
முதலில் உங்களது ஸ்டேட் பாங்க் வங்கியின் செயலியான YoNo வை உங்கல் மொபைலில் ஓபன் செய்து கொள்ளுங்கல், உங்களது பாஸ்வேர்டு, ஐடி எல்லாம் கொடுத்து உள்ளே சென்றதும், விளம்பரம் போல பேனர்கள் காட்டும்,அதில் Pre Approved லோன் குறித்து ஏதும் விளம்பரம் வந்தால் அதை க்ளிக் செய்து கேட்கும் தகவல்களை உள்ளிட்டால் இரண்டே நிமிடத்தில் ஆவணங்களே இல்லாமல் கடன் பெற முடியும்.
" Pre Approved லோன் என்பது பெரிதாக ஒன்றும் இல்லை, உங்கள் நம்பகத்தன்மைக்காக வங்கியே முன் வந்து வழங்கும் கடன், உங்களுக்கு தேவை என்னும் பட்சத்தில் எந்த ஒரு ஆவணங்களையும் சமர்ப்பிக்காமல் எளிதாக பெற்றுக் கொள்ளலாம் "