Pon Magan Saving Scheme Details Tamil - வங்கிகள், தனியார் நிறுவனங்கள் என எதுவும் தர முடியாத வட்டி விகிதங்களை போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டங்கள் தருகிறது என்று கூறினால் மிகையாகாது, அந்த வகையில் சேமிப்பிற்கு டபுள் ரிட்டன்ஸ் தரும் போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Pon Magan Saving Scheme Details Tamil - ஆண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு வெகுவாக பயன்படும் வகையில் மத்திய அரசு போஸ்ட் ஆபிஸ்சில் அறிமுகப்படுத்தி இருக்கும் சேமிப்பு திட்டம் தான் பொன் மகன் சேமிப்பு திட்டம், இத்திட்டத்தின் கீழ் 15 ஆண்டுகள் மாதத்திற்கு 500 முதல் 12,000 ரூபாய் வரை சேமிக்க முடியும். முதிர்வு தொகையாக கிட்ட தட்ட இரண்டு மடங்கு ரிட்டன்ஸ் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.
சரி, பொன் மகன் சேமிப்பு திட்டத்தில் இணைவது எப்படி?
பொன் மகன் சேமிப்பு திட்டத்தில் இணைய ஆதார் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒன்று இணைத்து முதலில் போஸ்ட் ஆபிஸ்சில் ரூ 500 கட்டி சேவிங்ஸ் அக்கவுண்ட் ஒன்று ஓபன் செய்ய வேண்டும், அதற்கு பின்னர் பொன் மகன் சேமிப்பு திட்டத்திற்கான படிவத்தை நிரப்பிக் கொடுத்தால் திட்டத்தில் இணைந்ததாக கருதப்படும், குழந்தைகளின் 18 வயது வரை அது இணைப்பு அக்கவுன்டாகவே செயல்படும். மாதம் ரூ 500 நீங்கள் சேவிங்ஸ் அக்கவுண்டில் போட்டாலே நேரடியாக திட்டத்திற்கான தவணை அதில் இருந்து எடுத்துக் கொள்ளப்படும்.
சரி வட்டி தொகை என்ன, என்ன ரிட்டன்ஸ் கிடைக்கும்?
இத்திட்டத்தின் ஆரம்பத்தில் 9 சதவிகிதத்திற்கும் மேலாக இருந்த வட்டி வீதம், தற்போது 7.1 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது, தற்போது செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கு விதிக்கப்படும் 8.2 சதவிகிதம் என்ற வட்டி விகிதத்தை விட 1.1 சதவிகிதம் இத்திட்டத்திற்கு வட்டி குறைவு தான், என்றாலும் கூட ரிட்டன்ஸ் என்பது கிட்ட தட்ட இரண்டு மடங்கை நெருங்க தான் செய்கிறது, உதாரணத்திற்கு மாதம் நீங்கள் ஆயிரம் வீதம் வருடத்திற்கு 12,000 ரூபாய் கட்டினால், 15 ஆண்டு தவணைக் காலம் (அசல் 1,80,000 ரூ) + 6 ஆண்டு காத்திருப்பு காலம் முடிந்ததும் உங்கள் கைகளில் 3 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வரை முதிர்வு தொகை கிடைக்கும்.
கட்டிய தவணையின் கீழ் கடன்
இத்திட்டத்தின் தவணைக் காலம் மூன்று வருடம் முடிந்திருக்கும் பட்சத்தில், கட்டிய தவணையின் கீழ் குறிப்பிட்ட கடன் உதவியும் வழங்கப்படுகிறது, கடனுக்கு வெறும் ஒரு சதவிகிதம் மட்டுமே வட்டி வீதமாம், ஆனால் கடனை 36 மாதங்களுக்குள் திருப்பி செலுத்த வேண்டும், 36 மாதங்களுக்குள் திருப்பி செலுத்தாத பட்சத்தில் 6 சதவிகிதம் வரை வட்டி விதிக்கப்படும்.