Pepper Health Benefits - நாம் தினசரி வீட்டில் பயன்படுத்துகிற மிளகில் இருக்கும் அற்புதங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பொதுவாக மிளகு என்பது ஆயுர்வேதம் மற்றும் சித்தாக்களில் முன்பிருந்தே பயன்படுத்தப்பட்டு வந்த ஒரு மூலிகையாக பார்க்கப்படுகிறது, இது தற்போது பல்வேறு வகை உணவுகளில் இயற்கையான கார சுவைக்காகவும், சுவையூட்டியாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது, இதில் பல்வேறு மருத்துவ பயன்களும் இருக்கின்றன, அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
உணவுகளோடு கொஞ்சம் மிளகு பொடி அல்லது மிளகு எடுத்துக் கொண்டால், வயிற்றில் இருக்கும் செரிமான நொதிகளை அது தூண்டி, நாம் எடுத்துக் கொள்ளும் உணவு ஆனது எளிதில் செரிமானம் ஆக உதவுகிறது. சுக்கு மல்லி காபி, அல்லது கடுங்காபிகளில் கொஞ்சம் மிளகு இடித்துப் போட்டு குடித்தால் சளி மற்றும் இருமல், தொண்டை வறட்சி ஆகியவற்றை அது குணப்படுத்த உதவும்.
மிளகை நாம் தினமும் உணவில் சேர்த்து பயன்படுத்தி வந்தால் மிளகில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும், டீ, காபி பருகுவதற்கு பதில், மிளகு பால் குடித்து வந்தால் அது உடலில் உள்ள கொழுப்பை குறைத்து உடல் எடையை பெருமளவில் குறைக்க உதவுகிறது. தலைவலி அதிகமாக இருந்தால் மிளகை வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை பருகலாம்.
மிளகு மற்றும் கல் உப்பை பொடியாக்கி அரைத்து பல் தேய்த்து வந்தால் அது பல் வலியை அறவே நீக்க உதவி செய்திடும், சரும ஆரோக்கியத்திற்கும் மன அழுத்தத்தை குறைக்கவும் மிளகு பெருமளவில் உதவுகிறது, மிளகில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் புற்றுநோயை தடுக்க உதவுகின்றன.அந்த வகையில் மிளகு தினமும் ஏதாவது ஒரு வகையில் எடுத்து வந்தால் இத்துனை நோய்களில் இருந்து விடுபடலாம்.