EMI Payment With Credit Card - வங்கியில் வாங்கிய லோனுக்கான தவணைகளை கிரெடிட் கார்டுகள் மூலம் கட்ட முடியுமா என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
EMI Payment With Credit Card - வங்கியில் அல்லது ரிசர்வ் வங்கிகளால் அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனங்களில் வாங்கிய கடனுக்கான மாதத்தவணையை கிரெடிட் கார்டுகள் மூலம் கட்ட முடியுமா என கேள்வி எழுந்தால் அதற்கு பதில் என்பது ஆம் தான், ஆனால் ஒரு சில வங்கிகள் அதற்கு ரெஸ்ட்ரிக்சன் கொடுத்து இருக்கும் என கூறப்படுகிறது, ஆனாலும் பெரும்பாலான வங்கிகளில் கிரெடிட் கார்டு மூலம் EMI கட்ட முடியும்,
ஆனால் இப்படி ஒரு ட்ரிக்ஸை தேவையில்லாமல் தொடர்ந்து பயன்படுத்தினால் அதுவே விபரீதம் ஆகி விடும், ஏதாவது ஒரு மாதம் அவசரத்திற்காக அதிக பணம் தேவைப்படலாம், செலவுகள் அதிகமாக இருக்கிறது, சம்பளம் அந்த மாதம் சரியாக போகும், அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் மட்டும், அந்த மாதத்திற்கான மாதத்தவணையை கிரெடிட் கார்டுகள் மூலம் செலுத்த வேண்டும்,
சும்மா இஸ்டத்திற்கு EMI தொகையை முழுக்க முழுக்க கிரெடிட் கார்டுகளை மட்டுமே பயன்படுத்தி கட்டி வந்தால், வங்கிகளில் என்னவோ கடன் குறைய தான் செய்யும், ஆனால் கிரெடிட் கார்டுகளில் பில் அதிகம் ஆகி கொண்டே செல்லும், கிரெடிட் கார்டு வட்டி குறித்து சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது, வருடத்திற்கு 30 சதவிகிதம் முதல் 40 சதவிகிதம் என வட்டியை தீட்டி விடுவார்கள்,
அந்த வகையில் கிரெடிட் கார்டுகள் மூலம் மாதத் தவணையை கட்டும் போது கொஞ்சம் பாதுகாப்பாக தான் கட்ட வேண்டும், ரொம்ப அவசரம் என்ற நிலையில் மட்டும் EMI கட்ட கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி விட்டு, கடன் தொகையை சரியான சமயத்தில் திருப்பி செலுத்தி விட வேண்டும், பாதுகாப்பான முறையில் பயன்படுத்தினா மட்டுமே கிரெடிட் கார்டுகள் வரமாக தெரியும்.