• India
```

பனை மரத்தில் இருந்து எடுக்கப்படும்...பதநீரில் இருக்கும் ஆகச்சிறந்த நன்மைகள்...!

Pathaneer Health Advantages in Tamil

By Ramesh

Published on:  2025-02-27 14:50:27  |    77

Pathaneer Health Advantages in Tamil - பனை மரத்தின் பாளையில் இருந்து எடுக்கப்படும் பதநீரில் இருக்கும் நன்மைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பதநீர் பனை மரத்திலிருந்து எடுக்கப்படும் ஒரு இயற்கையான பானம் ஆகும். இது பனை மரத்தின் பாளையிலிருந்து வடிக்கப்படுகிறது, பனைமரத்தின் பாளை நுனியை வெட்டி, ஒரு பானையில் சுண்ணாம்பு தடவி அது பாளையின் நுனிப்பகுதியில் கட்டப்பட்டு விடும், பாளையில் இருந்து சொட்டு சொட்டாக விழும் பதநீர் பானையில் சேகரிக்கப்பட்டு இறக்கப்படும்.

சரி இந்த பதநீரில் அப்படி என்ன தான் நன்மை இருக்கிறது என்றால், பதநீர் உடலை குளிர்ச்சியாக வைத்து உடலை வெப்ப சமநிலையோடு வைக்க உதவுகிறது. இது கோடை காலத்தில் மக்கள் அதிகம் தேடும் இயற்கையான பானம் ஆக பார்க்கப்படுகிறது. பதநீரில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, பொட்டாசியம், சோடியம் போன்ற தாதுக்கள் இருக்கின்றன.



வைட்டமின் பி1 (தயாமின்), வைட்டமின் பி2 (ரிபோஃப்ளேவின்), வைட்டமின் பி3 (நியாசின்), வைட்டமின் சி போன்ற வைட்டமின்களும் நிறைந்து இருக்கின்றன, இவை தவிர, பதநீரில் அமினோ அமிலங்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் இருக்கின்றன, பதநீரில் இருக்கும் இந்த சரிசமவிகித ஊட்டச்சத்துக்கள், உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு உதவுகின்றன. 

குறிப்பாக, எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியம், நரம்பு மண்டலத்தின் செயல்பாடு, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் செரிமானத்திற்கு பதநீர் மிகவும் பயனுள்ளதாக உள்ளது, பதநீர் ஆனது சிறுநீரகத்தின் செயல்பாட்டை மேம்படுத்தி, சிறுநீரக கற்கள் உருவாவதை முழுவதும் தடுக்கிறது, கல்லீரலை சுத்தப்படுத்தி அதன் செயல்பாட்டையும் நன்கு மேம்படுத்துகிறது.

Harmful Effects of Drinking Coca Cola
Information

Harmful Effects of Drinking Coca Cola