பொதுவாக கிராமத்தில் இருந்து நகரத்திற்கு செல்ல விரும்பாதவர்கள் கிராமத்திலேயே ஏதாவது தொழில் புரிய வேண்டும் என நினைக்கிறார்கள், சரி கிராமத்தில் என்ன தொழில் செய்யலாம், இலாபகரமாக இருக்குமா, நிலைக்க முடியுமா என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நகரத்தில் மட்டும் தான் வேலை இருக்கிறது, தொழில் இருக்கிறது என்பது எல்லாம் இல்லை, ஒரு சிறிய கிராமத்தில் அங்கு இருக்கும் தேவைகளை புரிந்து கொண்டு அதற்கேற்றார் போல ஒரு தொழிலை தோற்றுவித்தால் உங்களால் கூட ஒரு இலாபகரமான முதலாளி ஆக முடியும். சரி கிராமங்களில் என்ன என்ன தொழில் இருக்கிறது, என்ன என்ன தொழில் இலாபகரமானதாக அமையும்.
1) பருவகால விவசாயம்
2) ஆடு, கோழி வளர்ப்பு
நாட்டு கோழிகள், ஆடுகள் வளர்ப்பது கடினம் என பலரும் நினைக்கின்றனர், ஆனால் ஒரு பரந்து விரிந்த இடம் மட்டும் இருந்தால் கோழிகள், ஆடுகள் வளர்ப்பு என்பது எளிது தான். இரைக்கு என்று தனியாக நீங்கள் அதிகம் செலவிட வேண்டிய அவசியம் இல்லை, ஆடுகளை மேய்ச்சலுக்கு பழக்கினால் மட்டும் போதும், தினசரி அழைத்து மேச்சலுக்கு விட்டு விட்டு, மாலை சென்று அழைத்து விட்டு வரலாம். நாட்டுக்கோழிகள் இடும் முட்டைகளை எடுத்து தினசரி சந்தைப் படுத்தலாம். ஆடுகளையும் குட்டிகளையும், ஆட்டு மாட்டு சந்தைகளில் நல்ல விலைக்கு விற்கலாம். குறைந்த பட்சம் ஆடுகளை கோழிகளையும் மட்டும் பார்த்துக் கொண்டு 40,000 வரை மாதத்திற்கு சம்பாதிக்க முடியும்.
3) விவசாய பொருள்கள் கொள்முதல்
கிராமங்களில் விவசாயம் செய்பவர்களிடம் காய்கறிகள், இலைகள், வாழை பொருள்கள், பயிர்கள் உள்ளிட்டவைகளை நல்ல விலைக்கு கொள்முதல் செய்து வைத்து கொண்டு, அதனை பிற மாவட்டங்களுக்கோ, பிற மாநிலங்களுக்கோ சந்தைப்படுத்தலாம். கொஞ்சம் பெரிய அளவில் செய்யும் போது இந்த விவசாய பொருள்கள் கொள்முதலில் மாதல் ஒரு இலட்சம் வரையில் கூட இலாபம் பார்க்க முடியும், ஆனால் சரியான சந்தைப்படுத்துதல் என்பது அவசியம்.
4) பால் கொள்முதல் விற்பனை
என்ன தான் பாக்கெட் பால்கள் விற்பனை பெருகி இருந்தாலும், மாட்டு பாலை தேடுபவர்களும் அனைத்து மாவட்டங்களிலும் இருக்க தான் செய்கிறார்கள். மாட்டு பால் என்பது தற்போதெல்லாம் கிராமங்களில் மட்டுமே அதிக அளவில் கிடைக்கிறது. கிராமத்தில் இருக்கும் பால் விற்பனையாளர்களிடம் மாட்டு பாலை நல்ல விலைக்கு கொள்முதல் செய்து வைத்துக் கொண்டு, அதை சரியான முறையில் பதப்படுத்து பிற மாவட்டங்களுக்கு விநியோகம் செய்தால் அதீத இலாபம் பார்க்க முடியும். சரியான முறையில் சந்தைப்படுத்தும் போது மாதம் ஒரு இலட்சம் இத்தொழிலிலும் இலாபம் பார்க்க முடியும்.