Loan Without CIBIL In India - பொதுவாக திடீர் என்று அவசர தேவைக்கு பணம் தேவைப்படும், ஒரு ஒரு இலட்சம் இருந்தால் சமாளித்து விடலாம், ஒரு இரண்டு இலட்சம் இருந்தால் சமாளித்து விடலாம் என ஒரு நிலை இருக்கும், அந்த சமயத்தில் வங்கியை அணுகும் போது சிபில் ஸ்கோர் சரி இல்லை, உங்களிடம் முறையான வங்கி இருப்பு இல்லை, சம்பளக் கணக்கு இல்லை என கழித்து விடுகிறார்கள் என வைத்துக் கொள்வோம்.
அதற்கு பின்னர் வழி ஏதும் இல்லாமல், கந்து வட்டிக்கு கடன் வாங்கிக் கொண்டு வட்டியையே கட்ட முடியாமல் திணறிக் கொண்டு இருக்கும் பலரையும் பார்க்க முடிகிறது, ஆனால் தற்போது அப்படி எல்லாம் செய்ய வேண்டால் உங்களுக்காகவே இரண்டு வழிகள் இருக்கிறது, முதலில் குழு லோன், உங்களது மனைவியோ, மகளோ நீண்ட நாட்களாக செயல்படும் ஏதாவது மகளிர் குழுக்களுடன் இணைந்து கடன் கோரலாம்.
குழு செயல்படும் நாட்கள், அவர்கள் சரியான முறையில் செலுத்திய கடன் போன்றவைகளை பொறுத்து குழுவில் இருக்கும் ஒவ்வொரு நபருக்கும் ரூ 50,000 முதல் 2,00,000 வரை கடன் வழங்கப்படுகிறது, மகளிர் குழுக்கள் மட்டும் இல்லை, தற்போது ஆண்களுக்கான குழுவும் செயல்பட்டு வருகிறது, குழுவாக லோன் கேட்கப்படும் போது அதில் கடன் எளிதாக கிடைக்க அது வழிவகை செய்யும்.
இன்னொரு எளிதான வழி தங்கநகை அடகு கடன், நகைக்கடனை கட்டும் போது திருப்பி செலுத்தும் காலம் என்பது 12 மாதங்கள் தான், கந்து வட்டிக்கு கடன் வாங்கி அதில் மாதம் மாதம் வட்டியை மட்டும் கட்டுவதற்கு பதில், தங்க நகைக் கடனை வாங்கி அதை மாதத்தவணை மூலம் அசலோடு சேர்த்து வட்டியையும் கட்டினால் கடனையும் எளிதாக பெற முடியும் எளிதாக கடனை அடைக்கவும் அது வழி வகுக்கும்.