How To Apply For Tamil Pudhalvan Scheme - மேல் நிலை பள்ளி படிப்புகளை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மாதம் ரூ 1000 வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டத்திற்கு எப்படி பதிவு செய்வது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தமிழ்ப்புதல்வன் திட்டம் என்பது தமிழக அரசால் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் ஒரு திட்டம் ஆகும், அதாவது 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள் இத்திட்டத்திற்கு தகுதி ஆனவர்கள், தமிழ் வழி படிப்பை ஊக்குவிக்கும் வகையில் இத்திட்டம் துவங்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் 12 ஆம் வகுப்பு படித்து முடித்தது முதல் கல்லூரி படிப்பை முடிக்கும் வரை இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ரூ 1000 அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இது தமிழ் வழியில் படிப்பவர்களை மட்டும் ஊக்குவிக்காமல், பள்ளிப்படிப்போடு நிற்க நினைக்கும் மாணவர்களை அவர்களது கல்லூரி படிப்பையும் தொடர வைக்கும்.
இத்திட்டத்தின் கீழ் இணைய மாணவர்கள் முதல் தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ்கள், உங்களுடைய EMIS எண் ஆகியவற்றை முதலில் பெற வேண்டும், பொதுத்துறை வங்கிகள் எதிலும் ஒரு ஜீரோ பேலன்ஸ் கணக்கு துவங்கி வங்கி புத்தகத்தை கையில் வைத்து இருக்க வேண்டும், பின்னர் நீங்கள் படிக்க இருக்கும் கல்லூரியின் நோடல் ஆபிசரை சந்தித்து திட்டத்திற்கான விண்ணப்பத்தை பெற வேண்டும்.
விண்ணப்பத்தை கொடுப்பதற்கு முன் உங்களுடைய ஆதார் எந்த வங்கிக்கணக்கிற்கு பணம் ஏற வேண்டுமோ அந்த வங்கிக்கணக்கோடு Seed செய்யப்பட்டு இருக்க வேண்டும், மொபைல் எண்ணும் லிங் செய்து இருக்க வேண்டும், ஒரு சில கல்லூரிகளில் வங்கிகணக்கு, ஆதார் Seeding எல்லாமே அவர்களே செய்து கொடுக்கிறார்கள், ஆவணங்களை எல்லாம் சரியாக சமர்ப்பித்தால் இத்திட்டத்தின் கீழ் நீங்கள் அரசால் இணைக்கப்படுவீர்கள்.
" இத்திட்டத்தின் கீழான அனைத்து தகவல்களும் உங்கள் மொபைல் எண்ணிற்கு தான் வரும் அதனால் எப்போதும் பயன்பாட்டில் இருக்கும் மொபைல் எண்ணை ஆதாருடனும், இத்திட்டத்துடனும் இணைப்பில் வைத்து இருக்க வேண்டும் "