Micro Entrepreneurs Credit Card - தொழில் முனைவோர்களுக்கு ரூ 5 இலட்சம் கடன் வரம்புகள் உடன் கிரெடிட் கார்டு வழங்கும் திட்டத்தை மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்து இருந்தது, அதை எப்படி பெறுவது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சிறு குறு தொழில் முனைவோர்களை ஊக்குவிப்பதற்காக அரசு பல்வேறு திட்டங்களின் மூலம் கடனுதவி, நிதியுதவி, மானியங்கள் எல்லாம் வழங்கி வருகிறது, அந்த வகையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டில் சிறு குறு வணிகர்களுக்கான ஒரு கிரெடிட் கார்டு வழங்கும் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி இருந்தார், அதில் எப்படி இணைவது என்பது குறித்து பார்க்கலாம்.
முதலில் இந்த திட்டத்தின் மூலம் அரசு சிறு குறு வணிகர்களுக்கு வரும் ஏப்ரல் 2025 முதல் 5 இலட்சம் லிமிட்டுடன் கிரெடிட் கார்டுகளை வழங்கும், முதற்கட்டமாக இத்திட்டத்தின் கீழ் 1 மில்லியன் கிரெடிட் கார்டுகளை வழங்க அரசு திட்டமிட்டு இருக்கிறது, இத்திட்டத்தின் கீழ் கிரெடிட் கார்டுகளை பெற சிறு குறு வணிகர்கள் முதற்கட்டமாக Udyam வலைதளத்தில் நிறுவனத்தை ரிஜிஸ்டர் செய்து இருக்க வேண்டும்.
இது தான் இந்த கிரெடிட் கார்டுகளை பெற முதல் நிபந்தனை, பின்னர் நிறுவனம் ஒரு குறிப்பிட்ட வருமானங்களோடு இயங்கி கொண்டு இருக்க வேண்டும், நிறுவனத்தின் நிதி நிலை அறிக்கை, வங்கி கணக்கு, நிறுவனத்தின் முகவரி சான்று, உதயம் சான்றிதழ் இதை எல்லாம் எடுத்துக் கொண்டு அங்கீகரிக்கப்பட்ட வங்கியில் சென்று சமர்ப்பித்து ME Card க்கு பதிவு செய்தல் வேண்டும்.
பின்னர் வங்கிகள் உங்கள் விண்ணப்பத்தை பரிசீலித்து சிறு குறு தொழில் முனைவோர்களுக்கான கிரெடிட் கார்டு வழங்குவதற்கான முன்னெடுப்புகளை செய்யும், இந்த கிரெடிட் கார்டுகல் மூலம் சிறு குறு தொழில் முனைவோர்கள் நிறுவனத்திற்கு தேவையான மெட்டீரியல், நிறுவன விரிவாக்கம் மற்றும் நிறுவனத்திற்கு தேவையான ஒரு சில சேவைகளையும் எளிதாக பெற முடியும்.