Deceased Account Claim Process - அடகு நகை அல்லது இறந்தவரின் வங்கிக்கணக்கில் இருக்கும் பணத்தை முறையான ஆவணங்களுடன் மீட்பது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
Deceased Account Claim Process - நெருங்கிய உறவினரோ, குடும்பத்தில் ஒருவரோ, இரத்த சொந்தமோ திடீர் என இறந்து விட்டால் அவரது வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை, அடகு நகையை எவ்வாறு மீட்பது என பலருக்கும் ஒரு கேள்வி இருக்கும், அவர் வங்கிக் கணக்கில் ஏதேனும் நாமினியைக் குறிப்பிட்டு இருந்தால், அந்த பணத்தை, தங்கத்தை நிர்வகிக்கும் பொறுப்பு நாமினியைச் சாறும்.
ஆனாலும் அந்த நாமினி அந்த பணத்தை, நகையை வாரிசு தாரர்களுக்கு பிரித்து கொடுக்கிறாரா என்பது உறுதி செய்யப்பட்ட பின்னரே பணமோ நகையோ ஒப்படைக்கப்படும், இல்லையேல் எங்களுக்கு அந்த பணம், நகையில் உரிமை வேண்டாம் என வாரிசு தாரர்கள் எழுதி கொடுக்க வேண்டி வரும், சரி நாமினியை நியமிக்கவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி வரும்.
இந்த பிராசஸ் கொஞ்சம் அலைச்சல் தான், முதலில் முக்கிய ஆவணமாக கையில் இறப்பு சான்றிதழ் இருக்க வேண்டும், பின்னர் இறந்தவர்களின் வாரிசுகளை எல்லாம் பதிவு செய்து வாரிசு சான்றிதழ் ஈ சேவை மையத்தில் பதிவு செய்து எடுக்க வேண்டும், இது போக வாரிசுகளின் ஆதார், ரேசன் கார்டு, இறந்தவரின் வங்கி கணக்கு புத்தகம், நகை அடகு வைத்த ரசீது உள்ளிட்டவைகள் கையில் இருக்க வேண்டும்.
இவை அனைத்தும் உங்கள் கைகளில் இருக்கும் பட்சத்தில் வங்கிக்கு சென்று ஒரு செட்டில்மென்ட் பார்ம் ஒன்னு வாங்கிக் கொள்ள வேண்டும், நேரடியாக அந்த பார்மையும் கையில் இருக்கும் ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு ஒரு நோட்டரி வக்கீலிடம் அனைத்து வாரிசு தாரர்களையும் கூட்டி சென்று பத்திரங்கள் மூலம் பணத்தை, நகை பெற நினைக்கும் வாரிசை அல்லது பகிர்வை உறுதி செய்ய வேண்டும்.
" முக்கியமாக நோட்டரிக்கு முன் சாட்சிகள் 4 பேர் கையொப்பம் இட வேண்டி இருக்கும், அதற்கு பின் இந்த அனைத்து பிராசஸ்களையும் முடித்து விட்டு நேரடியாக வங்கிகளுக்கு நோட்டரி பப்ளிக் கொடுத்த ஆவணங்களுடன் சென்றால் நகையோ பணமோ உறுதி செய்யப்பட்ட வாரிசுடன் ஒப்படைக்கப்படும் "