APAAR Card Details Tamil - மத்திய அரசு கொண்டு வந்து இருக்கும் APAAR கார்டு என்பது என்ன, அது யாருக்கு எதற்காக பயன்படும் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
APAAR Card Details Tamil - APAAR ID Card (Automated Permanent Academic Account Registry) என்பது மத்திய அரசால் தனித்துவமாக மாணவர்களுக்கு என்று கொண்டு வரப்பட்ட ஒரு அடையாள அட்டை ஆகும். இந்த அட்டை தேசிய கல்விக் கொள்கை 2020 (NEP 2020) என்ற திட்டத்தின் மூலம் ‘ஒரே தேசம், மாணவர்களுக்கான ஒரே அடையாள அட்டை’ என்ற கொள்கையை மையமாக கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டது,
சரி, இந்த APAAR கார்டினால் என்ன பயன் எனக்கேட்டால் பொதுவாக ஒரு மாணவர் ஒன்றாம் வகுப்பு முதல் கல்லூரிப் படிப்பு வரை வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு பள்ளிகளில் வெவ்வேறு கல்லூரிகளில் பயின்று இருப்பார், அவரின் அத்துனை படிப்புகளையும் அத்துனை படிப்புகளிலும் அவர் எடுத்த கிரெடிட்களையும் மொத்தமாக ஒருங்கிணைத்து ஒரே கார்டில் தருவது தான் இந்த APAAR கார்டின் நோக்கம்,
இந்த கார்டின் பயன் என்னவென்றால் மாணவர்கள் ஒட்டு மொத்தமாக படித்த அத்துனை படிப்புகளையும் ஆராய இந்த ஒரு கார்டு போதுமானதாக இருக்கும், நாளைக்கே அவருக்கு ஒரு அரசு வேலை கிடைக்கிறது என்றால் அவரின் முழு படிப்பின் தகவல்களையும் இந்த கார்டினால் அறிந்து கொள்ள முடியும், பீல்டில் சென்று தேட வேண்டிய அவசியம் இருக்காது, ஒரே ஒரு நம்பரை தட்டினால் அவரின் கல்வி ஆராயப்பட்டு விடும்.
இது மாணவர்களுக்கும் எளிது, நாளை அவர்கள் வேலைக்கு செல்லும் போது அவர் குறித்தும் அவருடைய கல்வி குறித்தும் ஆராய நினைக்கும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் எளிதான விடயமாக இருக்கும். இந்த கார்டு அவ்வப்போது அப்டேட் செய்யப்படும் என்பதால் போலி கல்வி சான்றிதழ் பெற நினைப்பவர்கள் மாட்டிக் கொள்வார்கள் என கூறப்படுகிறது.
சரி, இந்த APAAR கார்டை எப்படி பெறுவது?
1) முதலில் https://apaar.education.gov.in இந்த லிங்கை க்ளிக் செய்து APAAR இணையதளத்திற்குள் செல்லவும்,
2) அப்படியே Scroll செய்தீர்களேயானால், Resources என்றதொரு ஆப்சன் இருக்கும்,
3) அதை க்ளிக் செய்ததும் இன்னொரு பக்கம் ஓபன் ஆகும், அதில் APAAR Parental Consent Form (English) என்று ஒரு பார்ம் இருக்கும்,
4) அதை பதிவிறக்கம் செய்து, உங்கள் பெற்றோர்களின் கையொப்பம் வாங்கி உங்கள் பள்ளிகளிலோ, கல்லூரிகளிலோ கொடுக்க வேண்டும்,
5) அவர்கள் உங்களது அனைத்து ஆவணங்களயும் சரி பார்த்து விட்டு அரசிடம் APAAR கார்டுக்கு பரிந்துரை செய்வார்கள்.
" இன்னும் பல மாநிலங்கள் தேசிய கல்வி கொள்கையையே ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதால் பல மாநிலங்களில் APAAR கார்டு திட்டம் கிடப்பில் கிடக்கிறது, மற்றபடி APAAR கார்டு ஒரு நல்ல திட்டம் தான் என்கின்றனர் கல்வியாளர்கள் "