• India

Flipkart VS Amazon | இந்தியாவில் எந்த E Commerce தளத்திற்கு...பயனர்களிடையே மவுசு அதிகம்...?

Flipkart VS Amazon

By Ramesh

Published on:  2024-12-20 06:29:37  |    75

Flipkart VS Amazon 2024 - இந்தியாவில் செயல்படும் ஈ காமர்ஸ் தளங்களில் ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் இந்த இரண்டு நிறுவனங்களும் இந்திய பயனர்களிடையே ஒரு குறிப்பிடத்தக்க இடத்தை தக்க வைத்துக் கொண்டு இருக்கின்றன, தினசரி என்று பார்க்கும் போது இரண்டு நிறுவனங்களும் இணைந்து கிட்டதட்ட 40 இலட்சம் அதாவது 4 மில்லியன் டெலிவரிகளை வெற்றிகரமாக பயனர்களுக்கு வழங்கி வருகின்றனர்.

அந்த இரண்டு ஈ காமர்ஸ் தளங்களுள் எது பெஸ்ட் என்று கேட்டால் ப்ளிப்கார்ட் பயனர்கள் ப்ளிப்கார்ட் என்பார்கள், அமேசான் பயனர்களை கேட்டால் அமேசான் தான் பெஸ்ட் என்பார்கள், ஆனால் இந்த இரண்டில் எது பெஸ்ட் என நிர்ணயிப்பது அந்த நடுநிலை பயனர்கள் தான், இது போக வருவாய், பயனர்களின் திருப்தி, கஸ்டமர் கேர் போன்ற காரணிகளும் எது பெஸ்ட் என நிர்ணயிக்கின்றன.



வருமான ரீதியாக பார்க்கும் போது இந்த நிதி ஆண்டில் அமேசான் சற்றே விஞ்சி நிற்கிறது, 2024 யில் அமேசானி நிகர வருமானம் என்பது கிட்டத்தட்ட 25,000 கோடியை நெருங்கி இருக்கிறது, அதே சமயத்தில் ப்ளிப்கார்ட் 19,000 கோடி வருமானத்தை இந்த நிதி ஆண்டில் நெருங்கி இருக்கிறது, அதே சமயத்தில் ப்ளிப்கார்ட் கடந்த ஆண்டை ஒப்பிடும் போது கிட்டத்தட்ட 41% வருமான இழப்பை குறைத்து இருக்கிறது.

அதே சமயத்தில் பயனர்களின் திருப்தி, கஸ்டமர் கேர் உள்ளிட்டவைகளை ஒப்பிடும் போது ப்ளிப்கார்ட்டை விட அமேசானே விஞ்சி நிற்கிறது, வருமான ரீதியாக அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் என இரண்டு நிறுவனங்களும் மாற்றி மாற்றி மார்க்கெட்டை பிடித்து வந்தாலும் கூட, வாடிக்கையாளர்களுடன் ஒரு எளிமையான இணக்கத்தை கொண்டு இருப்பது என்பது அமேசான் ஆகவே இருக்கிறது.