• India

வீட்டில் இருந்தே டெக்ஸ்டைல் பிசினஸ்...பிக் அப் ஆச்சினா... இலாபங்களில் கொழிக்கலாம்...!

Textile Business Ideas From Home

By Ramesh

Published on:  2024-12-30 22:23:13  |    1256

Textile Business Ideas From Home - டெக்ஸ்டைல் என்பது தொழில்களிலேயே அதிக இலாபம் கொழிக்க கூடிய ஒரு தொழிலாக பார்க்கப்படுகிறது, ஆனாலும் ஒரு டெக்ஸ்டைல் கடை வைக்க வேண்டுமானால் குறைந்த பட்சம் ஒரு சிறிய கடைக்கே கோடிக்கணக்கில் ரூபாய் தேவைப்படும், அந்த வகையில் வீட்டில் இருந்தே இந்த டெக்ஸ்டைல் தொழிலை குறைந்த முதலீட்டில் செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

பொதுவாக பெண்களில் பலரும், இந்த வீட்டில் இருந்தே செய்யும் டெக்ஸ்டைல் தொழிலை செய்து வருகின்றனர், சிறு முதலீட்டில் ஆரம்பித்து தற்போது பெரும் இலாபம் கொழிக்கும் தொழிலாக மாற்றி இருக்கின்றனர், முதலில் இந்த தொழிலை ஆரம்பிக்கும் முன்னதாக கொஞ்சம் சமூக வலைதளங்களை பற்றிய புரிதல் நிச்சயம் இருக்க வேண்டும்.



இந்த டிஜிட்டல் மீடியாக்கள் தான், உங்களது டெக்ஸ்டைல் தொழிலை எல்லா பக்கமும் வீட்டில் இருந்தே எடுத்துச் செல்ல உதவும், முதலில் மொத்த கடைகளுக்கு சென்று நல்ல தரமான துணிகளை எடுத்து முதலில் குடும்பத்தில் உள்ளவர்களிடம் சந்தைப்படுத்த வேண்டும், பின்னர் சமூக வலைதளங்களில் தனியாக பேஜ் ஒன்றை துவங்கி அதில் உங்களிடம் இருக்கும் பொருள்களை காட்சிப்படுத்தலாம்.

பொதுவாக ஒரு சில பெண்கள் சீலையை ஒரு கடையில் எடுத்து விட்டு அதற்கு மேட்ச் ஆன வளையல்கள், கம்மல்கள், ஜீவல்லரிகள் என தனி தனியாக மற்ற கடைகளில் தேடி அலைவார்கள், அந்த வகையில் நீங்களே சீலைக்கு ஏற்றவாறு வளையல்கள், ஜீவல்லரிகள், கம்மல்கள் வாங்கி வைத்து அதை செட் ஆகவும் விற்கலாம், மொத்த விலைக்கு சீலையை வாங்கி விற்கும் போது அதில் 100% க்கும் மேலாக கூட இலாபம் பார்க்க முடியும்.

" டெலிவரிக்கு ஏதவது கொரியரிடம் ஒரு புரிந்துணர்வுடன் ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாம், வீட்டில் இருந்து இந்த தொழிலை பார்க்கும் போது கொஞ்சம் பிக்அப் ஆக டைம் எடுக்கும், ஒன்ஸ் பிக் அப் ஆகி விட்டால் இலாபங்களில் கொழிக்கலாம் "