நன்மதிப்புள்ள சேமிப்பு விருப்பங்களை வழங்குவதில் தபால் அலுவலகம் முக்கியப் பங்காற்றுகிறது.
நன்மதிப்புள்ள சேமிப்பு விருப்பங்களை வழங்குவதில் தபால் அலுவலகம் முக்கியப் பங்காற்றுகிறது. குறைந்த முதலீட்டில் உயர்ந்த வருமானம் பெற விரும்பும் எந்த இந்தியர்களும் தபால் அலுவலக சேமிப்பு திட்டங்களை தேர்ந்தெடுத்து பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்யலாம். இதனால் நிறைய லாபமும் அடையாளம்.
சேமிப்பு திட்டங்கள்:
சம்பாதனை எவ்வளவு இருந்தாலும், எதிர்காலத்திற்காக திட்டமிட்டு சேமிப்பது அவசியம். தபால் அலுவலகம் குழந்தைகள் முதல் வயதானவர்களுக்கு ஏற்ற சேமிப்பு திட்டங்கள், ஓய்வூதிய திட்டம், பெண்களுக்கான சிறப்பு திட்டம், விபத்து காப்பீடு போன்ற பல்வேறு சிறு முதலீட்டு திட்டங்களை வழங்கி வருகிறது.
மாதாந்திர வருமானத் திட்டம் (POMIS):
தபால் அலுவலகத்தின் மாதாந்திர வருமானத் திட்டம் (POMIS) என்பது நிரந்தர வட்டி விகிதத்துடன் நம்பகமான வருவாய் தரும் முதலீட்டு திட்டமாகும். அரசாங்க ஆதரவு உள்ளதால் முதலீட்டாளர்களின் பணம் பாதுகாப்பாக இருக்கும். இந்த திட்டத்தில் தனிப்பட்ட கணக்கில் அதிகபட்சமாக ரூ. 9 லட்சமும், கூட்டுக் கணக்கில் ரூ. 15 லட்சமும் முதலீடு செய்யலாம், இதன் மூலம் மாதாந்திர வருவாயை உறுதிப்படுத்தலாம்.
வருமானம்:
தபால் அலுவலகத்தின் மாதாந்திர வருமான திட்டத்தில் (POMIS) முதலீடு செய்யும் தொகையின் அடிப்படையில் நிலையான மாதாந்திர வருவாய் கிடைக்கும். தற்போதைய 7.4% வட்டி விகிதத்தின் அடிப்படையில்,
ரூ. 5 லட்சம் முதலீட்டில் மாதம் ரூ. 3,083.33 வருமானம் கிடைக்கும்..
ரூ. 9 லட்சம் முதலீட்டிற்கு மாதம் ரூ. 5,550 வருவாய் பெறலாம்.
ரூ. 15 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ. 9,250 வருமானமாக கிடைக்கும்.