Pooja Rose Water Making Business - பொதுவாக பன்னீர் என்பது வீடுகளிலும் கோவில்களிலும் ஒரு புனித நீராக பார்க்கப்படுகிறது, வீடுகளில் மொதுவாக பூஜை செய்யும் போது அந்த இடம் புனிதமாக இருக்க வேண்டும் என்பதற்காக வீடு முழுவதிலும் தெளிப்பர், அதே சமயத்தில் கோவில்களில் அபிஷேகங்களுக்காகவும் பயன்படுத்துவார்கள், விழா வைபவங்களுக்கும் பன்னீர் ஜாடிகளில் அடித்து தெளிக்க பயன்படுத்துவார்கள்.
சரி இத்தகைய பன்னீரை தயாரித்து சந்தைப்படுத்துவது எப்படி என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம், இத்தகைய பன்னீரை தயாரிப்பதற்கு தூய நீரும், ரோஸ் கான்சன்ட்ரேட்டும் இருந்தால் போதும், பாட்டில்கள் 50 மிலி, 100 மிலி மட்டுமே அதிகம் விற்பனை ஆகும், ரோஸ் கான்சன்ட்ரேட் கெமிக்கல் கடைகளில் கிடைக்கும். ஒரு கான்சன்ட்ரேட் மூலம் 20 லிட்டர் வரை பன்னீர் தயாரிக்க முடியும்.
பாட்டில்களை மொத்த விலைக்கு கடைகளில் வாங்கி கொள்ளலாம், பன்னீரின் சந்தை என்பது பூஜை பொருட்கள் கடை மற்றும் கோவில்கள் தான், ஒரு பாட்டில் பன்னீரின் அசல் என்பது ரூ 3 முதல் 3.5 வரை ஆகும், கடைகளில் 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது, நீங்கள் மொத்த விலை கடைகளுக்கு 7 ரூபாய்க்கு கொடுக்கலாம், உங்களுக்கு ஒரு பாட்டிலுக்கு 3.5 ரூபாய் முதல் 4 ரூபாய் வரை கிடைக்கும்.
வாரத்திற்கு ஒரு 1000 பன்னீர் பாட்டில்கள் சந்தைப்படுத்தினாலும் கூட, மாதத்திற்கு சராசரியாக குறைந்தபட்சம் ரூ 25000 வரை வருமானம் பார்க்க முடியும், மெசின்கள் வைத்து பன்னீர் பாட்டில்களை பேக்கிங் செய்யும் போது அதிகமான பாட்டில்கள் தயாரித்து சந்தைப்படுத்த முடியும், முதற்கட்டமாக ஒரு குடிசைத்தொழிலாக ஆரம்பித்து தொழில் பிக் அப் ஆனதும் மெசின்களை இறக்குங்கள்.