• India
```

அடேங்கப்பா! காயிலாங்கடை தொழிலில் இவ்வளவு இலாபமா?

Old Metal Shop Business | Palaya Irumbu Kadai Business

By Dharani S

Published on:  2024-09-28 11:50:44  |    568

Old Metal Shop Business -காயிலாங்கடை வைத்து பழைய பொருட்களை கொள்முதல் செய்வதன் மூலம் நல்ல இலாபத்தை ஈட்ட முடியும், அது எவ்வாறு என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பொதுவாக காயிலாங்கடை என்பது பெரிதாக ஒன்றும் இல்லை, பழைய பிளாஸ்டிக்,  பழைய இரும்பு,  பழைய தகரம், பழைய புத்தகம்  பழைய துணிமணிகள்  ஆகியவற்றை  ஒரு குறிப்பிட்ட தொகைக்கு  எடுப்பது ஆகும்.

சரி எவ்வாறு  காயிலாங்கடையை தோற்றுவிப்பது?

காயிலாங்கடை என்னும் போது ஒரு மிகப்பெரிய குடோன் இருப்பது அவசியம் ஆகிறது.  இதுபோக  இது இரும்புத் தொழில் செய்யும் பல வியாபாரிகளை  கைக்குள் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும்.  ஒரு மூன்று கால் தள்ளுவண்டி இருப்பது அவசியமாகிறது.
காயிலாங்கடையை பொருத்தவரை தனியாக செய்வது என்பது கடினம்,  வேலைக்கு நிச்சயம் ஓரிரு ஆட்கள் வைத்துக் கொள்ள வேண்டும்,  பலசரக்கு மெடிக்கல் ஹோட்டல்  இதுபோல பல இடங்களில் சேரும் பழைய பொருட்கள், பழைய அட்டைகள் ஆகியவற்றை நாமே நேரடியாக அங்கு சென்று கொள்முதல் செய்து கொள்ள வேண்டும்,  வியாபாரிகள் என்னும் போது பழைய பொருட்களை ஓரிரு ரூபாய் கூட கொடுத்து எடுக்கலாம்,  அவ்வாறாக எடுக்கும் போது வியாபாரிகள் நேரடியாக கடைக்கு வந்து, சேரும் பழைய பொருட்களை வந்து போடுவர்.


சரி எந்தெந்த பழைய பொருட்கள் என்ன விலைக்கு எடுப்பது ?

இரும்பைப் பொறுத்தவரை கிலோ 25 ரூபாய்க்கு எடுக்கலாம்,  பிளாஸ்டிக் 18 ரூபாய்,  தகரம் 15 ரூபாய், அட்டை 10 ரூபாய், பழைய நல்ல சேலைகள் 20 ரூபாய், காட்டன் சேலைகள் 30 ரூபாய்  என ஒவ்வொன்றுக்கும் மார்க்கெட்டுக்கு ஏற்றார் போல விலையை நிர்ணயம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

சரி ஒவ்வொரு பழைய பொருட்களிலும் எவ்வளவு லாபம் இருக்கும்?

இரும்பை பொருத்தவரை மொத்த இரும்பு கடைகளில் கடைகளில் இருந்து கொள்முதல் செய்கிறார்கள் என்றால் 35 ரூபாய் வரைக்கும் எடுப்பார்கள். அப்படி என்றால் இரும்பில் மட்டுமே பத்து ரூபாய் லாபம் இருக்கும். மாதத்திற்கு இரண்டு டன் சேரும் பட்சத்தில்  இரும்பில் மட்டுமே ரூபாய் 20,000 லாபம் பார்க்க முடியும். 


அதற்கு அடுத்தபடியாக பிளாஸ்டிக்கில்  கிலோவிற்கு ஏழு ரூபாயும், அட்டைக்கு கிலோவிற்கு ஐந்து ரூபாயும், தகரத்தில் கிலோவிற்கு 10 ரூபாயும், சேலைகளில் நல்ல சேலைகள் என்றால் ஒரு சேலைக்கு ரூபாய் 15 முதல் 20 வரை  என லாபம் பார்க்க முடியும்.

" ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது நீங்கள் அனைத்தையும் சரியாக வாங்கி ,சரியான இடத்தில் கொண்டு சேர்க்கும் போது,  காயிலாங்கடையின் மூலம்  மாதம் ஒரு லட்சம் வரையில் லாபம் பார்க்க முடியும் "