• India

ஐஸ் க்ரீம் ஷாப்...திட்டமிட்டு ஆரம்பித்தால்...இலாபங்களில் கொழிக்கலாம்...!

Ice Cream Shop Business Ideas

By Ramesh

Published on:  2025-01-11 19:08:11  |    98

Ice Cream Shop Business Ideas - பொதுவாக ஐஸ்க்ரீம் ஷாப் என்பது நல்ல வருமானம் வரும் தொழில் தான், காரணம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஐஸ்க்ரீம் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள், அந்த வகையில் சிறப்பான முறையில் ஒரு ஐஸ்க்ரீம் ஷாப் ஆரம்பித்து அதன் மூலம் நல்ல வருமானம் பார்ப்பது எப்படி என்பது குறித்து இந்த தொகுப்பில் முழுமையாக பார்க்கலாம்.

முதலில் முதலீடு, கடையை எந்த அளவிற்கு வடிவமைக்கிறோமோ அந்த அளவிற்கு வாடிக்கையாளர்கள் உள்ளே தயங்காமல் வருவார்கள், குறைந்த பட்சம் ஒரு 3 முதல் 5 இலட்சம் கையில் இருந்தால் பிரம்மாண்டமான ஐஸ்க்ரீம் ஷாப்பை உருவாக்கி விடலாம், கடையை ரெடி செய்து விட்டு ஆவணங்கள் மூலம் முத்ரா லோன் கூட வங்கிகளில் முதலீட்டிற்காக எடுத்துக் கொள்ளலாம்.



பொதுவாக ஐஸ்க்ரீம் கடையை பொறுத்தவரை ஏதாவது Franchise எடுத்தேர்களேயானால் அதற்கே இலட்சக் கணக்கில் செலவாகி விடும், அது போக டார்கெட்டும் இருக்கும், ஒரு ஐஸ்க்ரீம் விற்றால் 50 பைசா இலாபம் கிடைப்பதே பெரிய கதையாகி விடும் சமாளிக்க முடியாது, ஆதலால் மொத்த விலைக்கு பல்க் பேக் ஐஸ்க்ரீம் வாங்கி, அதில் Flavours மிக்ஸ் செய்து Scoop ஆக வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கலாம்.

ஒரு 4 Scoop என்பது நமக்கான அசல் ஆக ரூ 20 முதல் 25 வரை ஆகும், அதை வாடிக்கையாளர்களுக்கு பரிமாறும் போது Flavours க்கு ஏற்ப ரூ 50 முதல் 100 ரூபாய் வரை விற்க முடியும், அப்படி பார்க்கும் போது பல்க் பேக் எடுத்து அதை ரீட்டைலில் விற்பது தான் நமக்கு இலாபம், Franchise எடுத்து ஒரு கஸ்டமருக்கு 50 காசு சம்பாதிப்பதை காட்டிலும், பல்க் பேக் ரீட்டைலில் விற்று ஐஸ்க்ரீம் ஷாப்பில் நல்ல வருமானம் பார்க்க முடியும்.