How To Start Fertilizer Shop - உரம் மற்றும் பூச்சிக் கொல்லி விற்பனை தொழிலில் எப்படி களம் இறங்குவது, இலாபம் இருக்குமா என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
How To Start Fertilizer Shop - முதலில் இந்த உரம் மற்றும் பூச்சிக்கொல்லி விற்பனையில் களம் இறங்கும் முன், இடத்தின் தேர்வு என்பது மிக மிக முக்கியம், நகரங்களில் உரம் மற்றும் பூச்சிக் கொல்லிகளுக்கான தேவை என்பது மிக மிக கம்மி, அதே சமயத்தில் விவசாய கிராமங்களை சுற்றிய ஒரு நகரம் என்றால் தைரியமாக வைக்கலாம், முடிந்தவரை கிராமங்கள் சூழ்ந்திருக்கும் பகுதியை தெரிவு செய்ய வேண்டும்.
பின்னர் உரக்கடையை அனைவரும் வைக்க முடியாது, விவசாய அறிவியல், உயிரி டெக்னாலஜி, உயிரி தாவரவியல் உள்ளிட்ட பிரிவுகளில் இளங்கலை முடித்த ஒருவரின் பெயரிலேயே துவங்க முடியும், அவ்வாறாக இளங்கலை முடித்த ஒருவரின் பெயரில் கடையை பஞ்சாயத்து அல்லது நகராட்சிகளில் ஆவணப்படுத்திக் கொள்ள வேண்டும், பின்னர் முறையாக உர விற்பனைக்கான லைசென்ஸ் பெற வேண்டும்,
https://www.tnagrisnet.tn.gov.in/esevai/ என்ற தளத்தில் உரம் மற்றும் பூச்சிக் கொல்லி விற்பனைக்கான லைசென்ஸ்சை இணைய வாயிலாக பதிவு செய்யலாம், பதிவு செய்த பின் மாநில அரசுகள் உங்கள் ஆவணங்களை சரிபார்த்து விட்டு நேரடி விசாரணை செய்து விட்டு, லைசென்ஸை வழங்கி விடுவார்கள், லைசென்ஸ் பெற்ற பின்னர் மட்டுமே உரங்களை கொள்முதல் செய்ய முடியும்,
https://kisansabha.in என்ற இணையதளத்தில் உரம் மற்றும் பூச்சி கொல்லிகளின் டீலர்களை அறிய முடியும், அந்த டீலர்கள் மூலம் உரம் மற்றும் பூச்சிக் கொல்லிகளை மொத்த விலைக்கு கொள்முதல் செய்ய முடியும், உயிரிய உரங்களை, உயிரிய பூச்சிக் கொல்லிகளை விற்பவர்களுக்கு அரசு சார்பில் மானியமும் கொடுக்கப்படுகிறது, இத்தொழில் இலாபத்தை பொறுத்தவரை 8-20% வரை பார்க்கலாம்.
" விவசாயிகளை எந்த அளவிற்கு நாடுகிறீர்கள், எந்த அளவிற்கு உரங்களை சரியாக சந்தைப்படுத்துகிறீர்களோ அந்த அளவிற்கு இலாபம் இருக்கும், உங்களின் சந்தையின் மதிப்பை பொறுத்து மாதம் ரூ 60,000 முதல் 1,00,000 வரை வருமானம் பார்க்கலாம் "