Home Based Food Business Ideas- பொதுவாக சொந்த ஊரை விட்டு வெளியூர்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் ஏதாவது எங்காவது ரூம் எடுத்து தங்கி பணி புரிய வேண்டிய அவசியம் இருக்கிறது, அதே சமயத்தில் தினமும் ஹோட்டலில் சாப்பிட வேண்டிய நிலை இருப்பதால் உடலும் ஒத்துழைக்காது அதே சமயத்தில் பட்ஜெட்டிலும் ஒரு பெரிய தொகை உணவுக்காக என்று தனியாக செலவிட வேண்டி வரும்.
இன்னொன்று அவர்களுக்கு வீட்டில் சமைக்கவும் நேரம் இருக்காது, காலையில் எந்திரித்து ஓடினால், இரவு அலுப்பில் எதுவும் செய்ய முடியாத நிலை இருக்கும், அவ்வாறானவர்களுக்கு வீட்டில் இருந்து சமையல் செய்து கொடுத்து ஒரு குறிப்பிட்ட வருமானம் எப்படி பார்ப்பது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம், இதற்கான தனியாக மெனக்கெட வேண்டியதில்லை.
கொஞ்சம் பெரிய பாத்திரம் வேண்டும், அடுப்பு ஹோட்டல் அடுப்பாக இருக்க வேண்டும், அளவு தெரிய வேண்டும், மற்றபடி நீங்கள் உங்கள் வீட்டிற்கு சமைக்கும் நேரத்தை விட எக்ஸ்ட்ராவாக ஒரு அரை மணி நேரம் அவ்வளவு தான், உங்கள் வீட்டில் அருகில் இவ்வாறான ஊழியர்கள் ஒரு 5 பேர் இருக்கிறார்கள் என வைத்துக் கொள்வோம், அந்த 5 பேரிடம் உணவு செய்து கொடுப்பதாகவும் தொகையையும் பேசிக் கொள்ள வேண்டும்.
பின்னர் தினசரி அவர்கள் கொண்டு வரும் ப்ளேட் அல்லது டிபனில் நீங்கள் செய்து வைத்து இருக்கும் சாப்பாடை கொடுத்தால் போதும், ஒரு சிலர் வீட்டுக்கே சென்று கூட கொடுப்பர், அவ்வாறாக முடியாதெனில் அவர்களாக கூட வாங்கிக் கொள்ள சொல்லலாம், ஒரு நபருக்கு சமைக்க ரூ 5000 முதல் 6000 வரை வசூலிக்கிறார்கள், ஒரு 5 பேருக்கு சமைத்து உணவு கொடுக்க முடிந்தால் கூட மாதம் 25,000 வரை வருமானம் பார்க்கலாம்.