Cool Drinks Dealership Business Plan - பொதுவாக பெப்சி கோக் போன்ற குளிர்பானங்களை விட, தற்போது 10 ரூபாய் பெட் பாட்டில் கூல்ட்ரிங்ஸ்கள் தான், தற்போது இந்திய சந்தைகளில் அதிகம் விற்பனை ஆகுகின்றன, முன்பெல்லாம் 20 ரூபாய்க்கு குறைந்து எந்த ஒரு கூல்ட்ரிங்ஸ்சும் வாங்க முடியாது, இந்த 10 ரூபாய் கூல்ட்ரிங்ஸ் வருவதற்கு முன்பாக, பெப்சி கோக் போன்ற கார்பரேட் கம்பெனிகளின் ஆதிக்கம் தான் இந்திய கூல்ட்ரிங்ஸ் சந்தைகளில் இருந்தது.
ஒரு கட்டத்திற்கு பின் கோலி சோடா, ஜிஞ்சர் சோடாக்களை தயாரித்து குடிசைத் தொழில் செய்து வந்த ஒரு சில இந்தியர்கள், மார்க்கெட்டில் 10 ரூபாய் கூல்ட்ரிங்ஸ்சை அறிமுகப்படுத்தினர், எளிய மக்களும் வாங்கும் விலை என்பதால் கார்பரேட் நிறுவனங்களின் குளிர்பானங்களை ஒதுக்கி விட்டு மக்களில் பெரும்பாலானோரும் 10 ரூபாய் குளிர்பானங்களுக்கு மாறி இருக்கின்றனர்.
அந்த வகையில் 10 ரூபாய் பெட் கூல்ட்ரிங்ஸ்களின் டீலர்ஷிப் எடுத்து சந்தைகளில் நிரந்தரமாக ஆட்கொள்வது எப்படி என்பது பார்க்கலாம். முதலில் முதலீடு, குறைந்தபட்சம் ஒரு 30 இலட்சங்கள் கையில் இருக்க வேண்டும், முத்ரா லோன் மூலம் கடனுதவியும் பெற்றுக் கொள்ளலாம், ஒரு முழு நீள குடோன், ஒரு லாரி வந்து ஏற்றி இறக்கும் இடத்தில் சிட்டிக்கு கொஞ்சம் அவுட்டர் என்றாலும் சரியாக இருக்கும்.
ஒரு குட்டி யானை அல்லது இரண்டு டெலிவரி வாகனம் இருப்பது அவசியம், நல்ல பிராண்ட் வேல்யூ உள்ள ஒரு பெட் பாட்டில் கம்பெனியை தேர்வு செய்ய வேண்டும், பின்னர் அவர்களிடம் நல்ல மார்க்கெட் Value உள்ள இடத்திற்கு டீலர்ஷிப் எடுத்துக் கொள்ள வேண்டும், ஒரு ஒரிரு இலட்சத்திற்கு டீலர்ஷிப்கான டெபாசிட் கட்ட வேண்டி இருக்கும், ஒரு இடத்திற்கான டீலர்ஷிப் எடுக்கிறீர்கள் என்றால் அந்த இடத்தை பற்றின முழு புரிதல் இல்லாமல் எடுக்க கூடாது.
டீலர்ஷிப் எடுக்கும் போது ஒரு 30 பெட் பாட்டில் கொண்ட ஒரு கேஸ் ரூ 160 வரை விலை வரும், ஏற்றுக் கூலி, இறக்கு கூலி என எல்லாம் சேர்த்து ஒரு கேஸ்க்கு ரூ 15 வரை ஆகும் என வைத்துக் கொண்டு ரூ 175 அசல் என வைத்துக் கொள்வோம், மார்க்கெட்டில் Whole Sale விலை என்பது ஒரு கேஸ் 210 ருபாய், ரீட்டைலுக்கு 225 ரூபாய் வரை விற்கிறார்கள், ஒரு சிலர் 240 வரையிலும் கூட விற்கிறார்கள்.
மொத்தவிலையையே கணக்கில் எடுத்துக் கொண்டால் கூட ஒரு கேஸ்க்கு 35 ரூபாய் இலாபம் இருக்கும், தற்போது உங்களிடம் ஒரு 7 ஏரியா இருக்கிறது என்றால், வாரத்திற்கு ஒரு ஏரியா என கணக்கு வைத்துக் கொள்ள வேண்டும், வாரத்திற்கு குறைந்த பட்சம் ஒரு 5500 கேஸ்கள் டெலிவரி என்பது டார்கெட் என வைத்துக் கொண்டால், வாரத்திற்கு சராசரியாக 11 இலட்சம் வரை நிறுவனத்திற்கு வருமானம் இருக்கும்.
" இதில் இலாபம் மட்டும் தனியாக இரண்டு இலட்சம் வரை கையில் நிற்கும். மாதத்திற்கு என எடுத்துக் கொண்டால் 45 இலட்சம் வரை வருமானம், அதில் 7 முதல் 9 இலட்சம் வரை தனியாக இலாபம் பார்க்கலாம், அதில் 2 இலட்சங்கள் சம்பளம், வாகன செலவு, வரிகள் என எடுத்துக் கொண்டால் கூட 4 முதல் 5 இலட்சங்கள் வரை இலாபம் மட்டும் தனியாக கையில் நிற்கும் "