Coffee Shop Business Plan - பொதுவாகவே காபிக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் இருக்க தான் செய்கிறார்கள், பொதுவாக நாம் கடைகளில் குடிக்கும் காபிக்கும், காபு ஷாப்களில் குடிக்கும் காபிக்கும் சற்றே வித்தியாசம் இருக்கும், அது மட்டும் அல்லாது ஒரு இரண்டு பேர் சேர்ந்து உட்கார்ந்து பேச வேண்டும், அதே சமயத்தில் காபியும் அருகில் இருந்தால் நன்றாக இருக்கும் என பலரும் காபி ஷாப்பை அணுகுவது உண்டு.
ஒரு காபி ஷாப்பில் முதலில் என்ன என்ன இருக்க வேண்டும், பப்ஸ், ரோல், ப்ரெஞ்ச் ஸ்நாக்ஸ் ஐட்டங்கள், ப்ரட் சாலட் உள்ளிட்டவைகள் பொதுவாக ஒரு காபி ஷாப்பில் இருக்கின்றன, காபி ஷாப்பின் அமைப்பும் கிட்டதட்ட ஒரு கலர்புல்லான, வண்ணமயமான, கவர்ச்சிகரமான அமைப்பாக இருக்க வேண்டும், காபி என்பதை வாடிக்கையாளர்களை கவரும் கடையின் அமைப்பு தான் முதல் பட்சம்.
அது தான் வாடிக்கையாளர்களை முதலில் கடைக்குள் இழுக்கும், பின்னர் உங்கள் காபியின் தரம், பின்னர் சரியான இட அமைப்பு இந்த மூன்றும் அமைந்து விட்டால் காபி ஷாப்பை இலாபகரமாக இயக்க முடியும், முதலீடு என்னும் போது காபி மெசின்கள், ஹீட்டர்ஸ், கடை அமைப்பு என எல்லாம் சேர்த்து குறைந்தபட்சம் ஒரு 7 முதல் 10 இலட்சங்கள் வரை ஆகலாம்.
காபியின் தரமும், நீங்கள் வாடிக்கையாளர்களை அணுகும் முறையும் உங்கள் கடைக்கு கூடுதல் கவனம் தரும், நீங்கள் சரியாக அனைத்தையும் கையாளும் பட்சத்தில் நிச்சயம் காபி ஷாப்பில் சராசரியாக மாதம் ரூ 50,000 வரை இலாபம் பார்க்கலாம், நல்ல அமைப்பான இடமும், அமைப்பான கடையும், அமைந்து விட்டால் இலட்சங்களில் கூட இலாபம் பார்க்கலாம்.