X Refused To Give Data About Bomb Threaters - விமான சேவைகளுக்கு மிரட்டல் விடுப்பவர்களின் தகவல்களை X சமூக வலைதளம் இந்தியாவிற்கு தர மறுப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
X Refused To Give Data About Bomb Threaters - கடந்த ஒரிரு வாரத்தில் மட்டும் 170 க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு சமூக வலைதளங்கள், கால்கள், துண்டு சீட்டுகள் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டு இருக்கிறது, இதனால் பெரும்பாலான விமான சேவைகள் நிறுத்தப்பட்டு விமான நிறுவனங்களும், அரசும் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றன, விமான சேவைகள் ஆங்காங்கே நிறுத்தப்படுவதால் அவசரத்திற்கு விமானங்களை பயன்படுத்தும் பல பயணிகளும் என்ன செய்வதென்று அறியாமல் திகைத்து வருகின்றனர்.
பொதுவாக விமான சேவைகளுக்கு வந்த மிரட்டல்களில் கிட்ட தட்ட X என்ப்படும் ட்விட்டர் வலைதளத்தில் மட்டுமே 50 சதவிகிதம் அளவிற்கு மிரட்டல் வந்து இருக்கிறது, கிட்டதட்ட எழுபதிற்கும் மேற்பட்ட மிரட்டல்கள் X சமூக வலைதளத்தில் தான் வந்ததாக கூறப்படுகிறது, இந்த நிலையில் இந்திய அரசு X சமூக வலை தளத்திடம் மிரட்டல் விட்டவர்களின் தகவல்களை கேட்டு கோரிக்கை வைத்து இருக்கிறது. ஆனால் X அமைப்போ எந்த வித தகவல்களையும் நாங்கள் தர முடியாது என கறாராக கூறி விட்டதாம்.
இந்த மிரட்டல்கள் மட்டும் அல்ல, X சமூக வலைதளத்தில் தற்போது இருக்கும் சுதந்திரத்தால், பலரும் பல தவறான தகவல்களையும், பாதுகாப்பிற்கு அச்சுருத்தலான விசயங்களையும், சமூக வலை தள சட்டத்திற்கு புறம்பான ஒரு சில செயல்களையும் எளிதாக புரிந்து வருகின்றனர், ஆனால் X அதற்கு எந்த வித நடவடிக்கையும் எடுப்பது இல்லை என பல நாடுகளும் X மீது கண்டனங்களை அவ்வப்போது தெரிவித்து வருகின்றனர்.
இந்தியா என்ன செய்ய போகிறது?
நாட்டிற்கு அச்சுருத்தலான ஒரு விடயத்தில் தகவல்களை தர மறுக்கும் X தளத்தை ஒட்டு மொத்தமாக முடக்கும் திறன் இந்தியாவிற்கு உண்டு, ஆனால் உலகின் மிகப்பெரிய சக்தியான எலான் மஸ்க் அவர்களின் கீழ் செயல்படும் X தளத்தை அவ்வளவு சீக்கிரத்தில் இந்தியா முடக்காது என்கின்றனர் ஒரு சிலர், எவ்வளவு பெரிய நிறுவனமாக இருந்தாலும் நிச்சயம்இந்தியா நடவடிக்கை எடுக்க தான் வேண்டும் என்கின்றனர் இன்னும் சிலர், இந்தியா இந்த இரண்டில் என்ன செய்ய போகிறது என்பதை பொருத்து இருந்து தான் பார்த்தாக வேண்டும்.