• India
```

பயணிகள் பயன்பாடு அதிகரிப்பு...நெல்லை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்சின் பெட்டிகள் 16 ஆக உயர்த்தப்படுமா..?

Will Coaches In The Nellai To Chennai Vande Bharat Express Be Increased

By Ramesh

Published on:  2024-11-13 19:23:50  |    299

Will Coaches In The Nellai To Chennai Vande Bharat Express Be Increased? - தென் தமிழகத்தின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் நெல்லையில் இருந்து சென்னை எக்மோர் வரை கடந்த செப்டம்பர் 2023 யில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது, சென்னையில் இருந்து மதியம் 2:50 அளவில் கிளம்பும் வந்தே பாரத் திருநெல்வேலிக்கு அதே நாளில் இரவு 10:40 க்கு வந்து விடுகிறது, கிட்டதட்ட 650 கிலோ மீட்டர்களை 7.50 மணி நேரத்தில் கடப்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல திருநெல்வேலியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் சென்னை எக்மோருக்கு மதியம் 1:50 க்கு சென்றடைகிறது, ஆரம்பத்தில் இந்த எக்ஸ்பிரஸ்க்கு மக்கள் கூட்டம் வருமோ எனும் சந்தேகத்தில் வெறும் 8 பெட்டிகளுடன் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டது, ஆனால் எதிர்பாராத வகையில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்க்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.



தற்போது திருநெல்வேலி, சென்னை எக்மோர் மற்றும் நாகர்கோவிலில் இருந்து இயக்கப்படும் அனைத்து தென்னக வந்தேபாரத் ரயில்களுமே முழு கொள்ளளவு பயணிகளுடன் இயங்கி வருகிறது, இதனால் தொடர்ந்து வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்சில் பயணிகளின் பயன்பாடு அதிகரித்து இருப்பதால் பெட்டிகளை 8 யில் இருந்து 16 ஆக மாற்ற தென்னக ரயில்வே பரிந்துரைத்து இருக்கிறது.

ஒன்றிய அரசு இந்த பரிந்துரைக்கு அனுமதி அளிக்கும் பட்சத்தில் நெல்லையில் இருந்து சென்னை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்சில் மேலும் 8 பெட்டிகள்  இணைக்கப்பட்டு 16 பெட்டிகளுடன் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, இந்த இணைவு வெகு விரைவில் சாத்தியம் ஆகும் பட்சத்தில் தென் மாவட்ட பயணிகள் சிரமமின்றி சென்னைக்கு பயணிக்க அது வழி வகுக்கும்,