• India
```

இனி கூகுள் பே, ஸ்விக்கி எதுவும் யூஸ் பண்ண முடியாது..TRAI யின் புதிய கட்டுப்பாடுகள்..!

TRAI New Regulation Might Affect All Online Transactions

By Ramesh

Published on:  2024-10-26 17:40:07  |    920

The New TRAI Regulation Could Impact Every Online Transaction - TRAI யின் புதிய கட்டுப்பாடுகளால் இனி வாடிக்கையாளர்கள் கூகுள் பே, போன் பே, ஸ்விக்கி, சொமட்டோ உள்ளிட்ட பல ஆன்லைன் மற்றும் ஈ காமர்ஸ் சேவைகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது.

TRAI New Regulation Might Affect All Online Transactions - TRAI (Telephone Regulatory Authority Of India) விதித்து இருக்கும் புதிய கட்டுப்பாடுகளால், வங்கிகள், கொரியர்கள், கூகுள் பே, போன் பே, ஸ்விக்கி, சொமட்டோ உள்ளிட்ட நிறுவனங்கள் பெரும் தலைவலியை சந்தித்து வருகின்றன, தற்போதெல்லாம் பெரிய பெரிய ட்ரான்சாக்சன்கள் ஒரே ஒரு கடவுச் சொல்லில் (One Time Password) நிகழ்ந்து விடுகிறது, ஆனால் தற்போது அந்த கடவுச்சொல்லில் தான் பிரச்சினையே.

பொதுவாக ஒரு வங்கியில் இருந்தோ, ஒரு ஈ காமர்ஸ் நிறுவனங்களில் இருந்தோ, ஒரு டெலிவரி நிறுவனங்களில் இருந்தோ வாடிக்கையாளர்களுக்கு வரும் கடவுச்சொல் என்பது பிறரால் எளிதாக Access செய்ய கூடியதாக இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது, மொபைல்களில் இருக்கும் செயலிகள், நீங்கள் பயன்படுத்தும் நெட்வொர்க்குகள் என இரண்டுமே உங்களது OTP யை எளிதாக Access செய்ய முடியுமாம்.


இது போக பல முக்கியமான கடவுச்சொல்கள் நமக்கு எந்த ஒரு தெளிவான அனுப்புநர்களின் தகவல்களும் அதைப் பெறுபவர்களின் தகவல்களும் இருப்பதில்லையாம், இதனால் பெரும்பாலான சைபர் கிரைம்கள் எளிதாக நடக்க இது வழிவகுப்பதால் இனி எந்த நிறுவனமாக இருந்தாலும் சரி, சரியான அனுப்புநர்கள், பெறுநர்கள் இல்லை எனில் அந்த நிறுவனத்தின் மெசேஜ்கள் முற்றிலுமாக பிளாக் செய்யப்படும் என TRAI எச்சரித்து இருக்கிறது.

பொதுவாக நாம் பயன்படுத்து வங்கியில் இருந்து கூகுள் பே, ஸ்விக்கி, சொமட்டோ, ஓலா உள்ளிட்ட அனைத்திற்குமெ இந்த கட்டுப்பாடுகள் பொருந்துமாம், அனைவருக்குமே OTP கலாச்சாரம் பழகி விட்டதால் புதிய தொழில் நுட்பத்திற்கு மாற நிறுவனங்கள் 2 மாதங்கள் நேரம் கேட்டும் TRAI கொடுக்க மறுத்து நவம்பர் 1 வரை கெடு விதித்து இருக்கிறது, இதனால் வங்கி உட்பட பல நிறுவனங்கள் முடங்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.