இந்தியாவில் தங்கத்தின் மீது அதிக அளவும் ஆர்வம் காட்டுகிறார்கள். மேலும் தங்கத்தின் விலை அதிகரிப்பதால் அதன் மீது முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என்பதால் அதிகமாக மக்கள் வாங்குகிறார்கள். அதே போல தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மக்களின் அவசர நிலைக்கு தங்கம் பெரிய அளவில் உதவியாக இருக்கிறது. திருமணம், மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு தங்கத்தை உடனடியாக விற்கவோ அடமானம் வைக்கவோ பெரும் உதவியாக இருக்கிறது.
தற்போது இன்றைய தங்கத்தின் நிலவரத்தின் படி ஒரு கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து 7,450 ரூபாய்க்கும், ஒரு சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்து 59ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனையாகுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.