• India
```

அமெரிக்க தேர்தலை முன்னிட்டு..இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு சரிவு!

Rupee Hits Record Low Amid Of US Election

By Ramesh

Published on:  2024-11-06 23:15:07  |    89

Rupee Hits Record Low Amid Of US Election - அமெரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் அதிபர் தேர்தலை முன்னிட்டு இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு சரிந்து இருக்கிறது, நேற்றைய தினத்தை விட 0.1 சதவிகிதம் சரிந்து கிட்டதட்ட டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 84.1950 ஆகி இருக்கிறது, இருந்தாலும் மற்ற ஆசிய கரன்சிகள் அளவிற்கு இந்திய ரூபாயில் வீழ்ச்சி இல்லை என்றே கூறப்படுகிறது.

சீனாவின் யுவான், மலேசியாவின் ரிங்கிட், கொரியாவின் வொன், தாய்லாந்தின் பஹ்ட் உள்ளிட்ட கரன்சிகள் கிட்டதட்ட டாலருக்கு எதிராக 1 சதவிகிதம் முதல் 1.3 சதவிகிதம் வரை சரிந்து இருக்கிறது, டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பில் பெரிதாக எந்த உயர்வும் இல்லை, காரணம் தொடர்ந்து ரிசர்வ் வங்கி டாலரை விற்றுக் கொண்டு இருக்கிறது, கடந்த மாதத்தில் பல முறை இவ்வாறாக ரிசர்வ் வங்கி டாலரை விற்று இருக்கிறது.



இதுவும் ரூபாயின் மதிப்பில் பெரிதாக ஏதும் மாற்றம் இல்லாததற்கு காரணமாக கூறப்படுகிறது, மேலும் டொனால்ர் ட்ரம் அதிபர் ஆகும் பட்சத்தில் இந்தியாவும் , சீனாவும் வர்த்தக ரீதியாக பெரிதும் பாதிக்க கூடும் என்ற கருத்தும் நிலவி இருக்கிறது, ட்ரம்ப் எப்போது பதிலடிக்கு பெயர் போனவர், ட்ரம்ப் அதிபர் ஆகும் பட்சத்தில் இந்தியா மற்றும் சீனாவில் இருந்து இறக்குமதி ஆகும் பொருளுக்கு அதிக இறக்குமதி வரி விதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறதாம்,

அதுவும் சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 60 சதவிகிதம் வரை வரி விதிக்க வாய்ப்பு இருக்கிறதாம், ட்ரம்ப் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அமெரிக்காவின் பந்தய சந்தைகளில் 90 சதவிகிதமாக இருப்பதால், இனி சீனா அமெரிக்காவில் இலாபகர வர்த்தகம் மேற்கொள்வது என்பது மிக மிக கடினம், தொடர்ந்து டாலருக்கு எதிரான் ஆசிய கரன்சிகள் சரிவது இனி வாடிக்கை தான்