• India
```

டிஜிட்டல் பரிவர்த்தனை அமலாக்கம்..ரயில் நிலையத்தில் பணம் வாங்க மறுக்கும் ஊழியர்கள்..திண்டாடும் எளிய மக்கள்..!

Refusal To Accept Money At Tirunelveli Railway Station

By Ramesh

Published on:  2024-10-28 04:45:03  |    179

Refusal To Accept Money At Tirunelveli Railway Station - திருநெல்வேலி ரயில் நிலையத்தின் டிஜிட்டல் பரிவர்த்தனை அமலாக்கம் செய்து இருப்பதால் ஊழியர்கள் பணம் வாங்க மறுக்கின்றனர், இதனால் எளிய மக்கள் திண்டாடி வருகின்றனர்.

Refusal To Accept Money At Tirunelveli Railway Station - தேசம் முழுக்க கூகுள் பே, போன் பே, பேடிஎம் என டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மக்கள் பயன்படுத்தி வந்தாலும் கூட, இன்னும் தேசத்தில் 35 சதவிகிதம் மக்கள் கேஷ் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவே விரும்புகின்றனர், அதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகிறது, டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மீதான பயம், இன்னொன்று அதை சரிவர பயன்படுத்த தெரியாத எளிய மக்கள்.

தேசம் டிஜிட்டலாகி கொண்டு இருக்கும் சமயத்தில் ரயில்வே துறையின் கேஷ் கவுண்டர்களுக்கும் நாட்டில் டிஜிட்டல் மயம் ஆக்கப்பட்டு வருகிறது, இந்த நிலையில் தான் சில தினங்களுக்கு முன்பில் இருந்து  திருநெல்வேலி ரயில் நிலையத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனை அமலாக்கம் செய்யப்பட்டது, அது ஒரு சிலருக்கு எளிதாக அமைந்தாலும், பொதுவாக திருநெல்வேலி என்பது எளியமக்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால் அவர்கள் பயன்படுத்த வெகுவாக திணறி வருகின்றனர்.



பொதுவான மக்களுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனை என்பது எளிதாக தெரிந்தால், எளிய மக்களுக்கு கேஷ் பரிவர்த்தனையே எளிதாக தெரிகிறது, ஆனால் திருநெல்வேலி ரயில் நிலையம் எளிய மக்கள் வழங்கும் கேஷ் பரிவர்த்தனையை ஏற்றுக் கொள்ள மறுப்பதால் அவர்கள் புக்கிங் செய்ய திண்டாடி வருகின்றனர், தீபாவளி பண்டிகை வேறு வர இருப்பதால் எளிய மக்கள் டிக்கெட் பதிவு செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஒரு சேவை என்பது அனைவருக்கும் ஆனதாக இருக்க வேண்டும், ஒரு பெருநகரத்தில் பெரும்பான்மையானவர்களுக்கு மட்டும் பயன்படுவது சேவையாக இருக்காது, ஆதலால் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் வரவேற்கத்தக்கது தான், ஆனால் எளிய மக்களுக்கான கேஷ் பரிவர்த்தனையும் ரயில் நிலையத்தில் இருக்க வேண்டும் என்பது வெகுஜன மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.