இப்போது ஆதார் அட்டை முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இந்திய அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளுக்கும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.
இப்போது ஆதார் அட்டை முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இந்திய அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளுக்கும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பலருக்கும் ஆதார் அட்டையில் இருக்கும் பழைய போட்டோவை மற்ற வேண்டும் என்று நினைப்பார்கள். அதனால் ஆதாரில் இருக்கும் பழைய போட்டோவை எப்படி மாற்றாலம் என்பது தொடர்பாக பாப்போம்..
எப்படி மாற்றுவது?
*https://uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை திறந்து, ‘Get Aadhaar’ பிரிவுக்குச் செல்லவும். ஆதார் பதிவு / புதுப்பிப்பு படிவத்தை (Aadhaar Enrollment/Update Form) பதிவிறக்கம் செய்து, தேவையான தகவல்களை நிரப்பவும்.
*அருகில் இருக்கும் ஆதார் பதிவு மையத்திற்குச் சென்று பூர்த்தி செய்த படிவத்தை சமர்ப்பிக்கவும். மையத்தில் உங்கள் புதிய புகைப்படத்தை எடுத்துப் பதிவேற்றுவார்கள்.
*கைரேகை (Fingerprint), விழித்திரை ஸ்கேன் (Iris Scan), மற்றும் புகைப்படம் ஆகியவை அங்கு புதுப்பிக்கப்படும்.
*விண்ணப்பம் ஏற்கப்பட்டதும், URN (Update Request Number) வழங்கப்படும்.இதை UIDAI இணையதளத்தில் பயன்படுத்தி புதுப்பிப்பு நிலையை கண்காணிக்கலாம்.
*புதிய புகைப்படத்துடன் 30 நாட்களுக்குள் புதுப்பிக்கப்பட்ட ஆதார் கார்டு உங்கள் முகவரிக்கு அனுப்பப்படும்.புகைப்படம் மாற்றுவதற்காக ₹50 கட்டணம் செலுத்த வேண்டும்.