• India
```

உலகளாவிய வறுமை பட்டியலில் இந்தியா முதலிடம்..ஆய்வில் அதிர்ச்சிகர தகவல்...!

Poverty Index India Is At The Top Of The List

By Ramesh

Published on:  2024-10-19 11:26:21  |    210

Poverty Index India Is At The Top Of The List - ஐநா வளர்ச்சி திட்டம் நடத்திய ஆய்வு ஒன்றில் உலகளாவிய வறுமை பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

Poverty Index India Is At The Top Of The List - ஐநா வளர்ச்சி திட்டம் மற்றும் ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனிதவள மேம்பாட்டு அமைப்பு இணைந்து 2010 முதல் உலகளாவிய அளவில் நிலவும் வறுமையை ஆய்வு செய்து வருகிறது. அந்த வகையில் 2024 ஆண்டுக்கான வறுமை பட்டியலை ஐநா வெளியிட்டு இருக்கிறது. உலகளாவிய அளவில் இருக்கும் 112 நாடுகளில் வசிக்கும் 630 கோடி பேரில் 110 கோடி மக்கள் வறுமையின் கோரதாண்டவத்தினால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களாம். இந்த 110 கோடி பேரில் போரினால் பாதிக்கப்பட்டு வறுமைக் கோட்டிற்கு கீழ் சென்றவர்கள் மட்டும் 45.50 கோடி பேர் ஆக அறியப்படுகின்றனர். ஐநா வெளியிட்ட இந்த வறுமைப்பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருப்பது அதிர்ச்சிகரமாக இருக்கிறது, இந்தியாவில் மட்டும் கிட்டதட்ட 23.40 கோடி பேர் வறுமையின் பிடியில் சிக்கி இருக்கின்றனர், அதற்கு அடுத்தபடியாக பாகிஸ்தானில் 9.60 கோடி பேர் வறுமையினால் மாதிக்கப்பட்டு இருக்கிறார்களாம். 8.60 கோடி பேருடன் எத்தியோப்பியா இந்த வறுமை பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது.

உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளுள் ஒன்றாக அறியப்படும் இந்தியா வறுமை மிகுந்த நாடுகளில் முதலிடத்தில் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கிறது, இதற்கு என்ன காரணம் என்று உற்று நோக்கிய போது குறிப்பிட்ட ஒரு சில ஒரு சதவிகிதத்தினரிடம் நாட்டின் 65 சதவிகித சொத்துக்கள் இருப்பது தான் முதல் காரணமாக கூறப்படுகிறது, இது போக பணப்பரவல் என்பது இந்தியாவில் சமநிலையாக இல்லாததும் இன்னொரு காரணம் ஆக கூறப்படுகிறது. 

இன்னும் ஒரு சில நாடுகளில், நிலவும் போர் பதற்றமும் மக்களை வறுமையின் பிடியில் தள்ளி இருக்கிறது, இந்தியாவை எடுத்துக் கொண்டால், பத்தில் ஒருவர் வறுமையின் பிடியில் இருக்கின்றனர், ஆனால் போர் நடக்கும் நாடுகளில் வசிக்கின்ற மக்களை கருத்தில் கொண்டால் அவர்களுள், நான்கில் ஒருவர் வறுமையின் பிடியில் இருப்பதாக ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனிதவள மேம்பாட்டு அமைப்பு அறிக்கை விடுத்து இருக்கிறது.