Nuclear Power Plant in India -நிலவில் அணு உலை அமைக்கும் திட்டத்தில் ரஷ்யா மற்றும் சீனா ஏற்கனவே புரிந்துணர்வு ஒப்பந்தம் இட்டு இருக்கும் நிலையில், அத்திட்டத்தில் இந்தியாவும் இணைய இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
நிலவில் அணு உலை அமைக்கும் எதிர்கால திட்டத்திற்காக ரஷ்ய விண்வெளி நிறுவனமும், சீன விண்வெளி நிறுவனமும் ஏற்கனவே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டு இருக்கின்றன. இத்திட்டத்திற்கு ரஷ்ய அணு ஆராய்ச்சி நிறுவனம் தலைமை தாங்கும் நிலையில், இத்திட்டத்தில் இந்தியாவையும் இணைப்பதற்காக, பிரதமர் மோடி அவர்களிடம் ரஷ்ய அதிபர்புதின் பேசி இருப்பதாக ஒரு தகவல் பரவி வருகிறது.
நிலவில் சூரிய ஒளியே இல்லாத இடத்திலும் கூட இந்த அணு உலை இயங்குமாம். இந்தியாவும் இத்திட்டத்தில் இணையும் பட்சத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மிகப்பெரிய மைல்கல்லாக இத்திட்டம் அமையும்.