Nita Ambani Water Cost-பெரும் கோடீஸ்வரரான முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானியின் ஆடம்பர வாழ்க்கை மீண்டும் ஒரு தடவை இணையத்தில் பேசிக்கொள்ளப்பட்டுள்ளது.
பெரும் கோடீஸ்வரரான முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானியின் ஆடம்பரமான வாழ்க்கை பற்றி பல முறை social media மற்றும் பத்திரிகை செய்தியாக வந்துள்ளது. சமீபத்தில் வெளியான புகைப்படத்தில், நீதா அம்பானி தங்கம் கரைக்கப்பட்ட உலகின் மிக விலை உயர்ந்த குடிநீரை பருகுவது போல இருந்தது, இது பல பேருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.. நீதா அம்பானி பயன்படுத்துவதாக கூறப்படும் அந்த குடிநீரின் பெயர் Acqua di Cristallo Tributo a Modigliani. பிரபல கலைஞர் Fernando Altamirano வடிவமைத்த சிறப்பு பாட்டில்களில் இந்த உயர்தர குடிநீர் சந்தைப் படுத்தப்படுகிறது.
இந்த குடிநீர் பிரான்சில் உள்ள நீரூற்றில், பிஜியின் நீரூற்றில் மற்றும் ஐஸ்லாந்தின் பனிப்பாறைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட தண்ணீரில் தங்கத்தை கரைத்து தயாரிக்கப்படுகிறது. ஒவ்வொரு பாட்டிலும் 60,000 அமெரிக்க டொலர் (இந்திய மதிப்பில் ரூ 49 லட்சம்) விலையில் விற்கப்படுகிறது. இந்த நீரை பருகுவதால், 60 வயதை கடந்தும் நீதா அம்பானியின் தோல் சுருக்கம் ஏற்படாமல், முகம் பொலிவாக உள்ளது என்றும் கூறப்படுகிறது.
ரூ 1.5 கோடி மதிப்பிலான தேநீர் Acqua di Cristallo Tributo a Modigliani குடிநீருக்கு உலகின் மிக விலையுயர்ந்த குடிநீர் என்ற கின்னஸ் சாதனையும் உள்ளது. வெளியான தகவலின் அடிப்படையில், 750 மில்லி கொள்ளளவு கொண்ட இந்த பாட்டில் 24 காரட் தங்கத்தால் ஆனது என்றும், 5 கிராம் அளவுக்கு தங்கத்தை குடிநீரில் கலந்துள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது.