• India
```

நூதன முறையில் ATM ப்ஃராடுகள்..உஷார் மக்களே..உஷார்..!

New Type Of ATM Frauds

By Ramesh

Published on:  2024-11-04 16:08:00  |    135

New Type Of ATM Frauds - ATM வாசலில் நூதான முறையில் ஒரு ப்ராஃடு வேலை ஒன்று நடக்கிறது அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

New Type Of ATM Frauds - பொதுவாக ATM களில் குறிப்பிடத்தக்க முறையில் பல ப்ஃராடுகள் இன்னமும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது, டிஜிட்டல் முறைகள் வந்ததில் இருந்து ஸ்கேம்களும் பெருகி கொண்டு தான் இருக்கிறது, ATM களையே ஹேக் செய்யும் அளவிற்கு தொழில் நுட்பங்களும் வளர்ந்து விட்டன, ஆனாலும் சின்ன சின்ன விடயங்கள் வைத்து எளிய மக்களை ஏமாற்றியும் ஒரு சிலர் பிழைப்பு நடத்துகின்றனர்,

யாராவது ATM வாசல்களில் டிப் டாப்பாக ஐடிகள் எல்லாம் போட்டுக் கொண்டு நின்றால் அவர்கள் என்ன கேட்டாலும் என்ன சொன்னாலும் நம்பி விடாதீர்கள், அதாவது அவர்களின் டார்கெட் எளிய மக்கள் தான், யாராவது ATM யில் பணம் எடுக்க தெரியாமல் வந்து நிற்கும் போது அவர்களிடன் பின் நம்பர் எல்லாம் கேட்டு அவர்களுக்கு எடுத்துக் கொடுப்பது போல எடுத்துக் கொடுக்கிறார்கள்.


பின்னர் அவர்களிடம் அவர்களுடைய ATM யை கொடுக்காமல், அந்த வங்கி ATM போல இவர்கள் அச்சடித்து கைகளில் வைத்திருக்கும் டம்மி ATM களை அவர்களிடம் கொடுத்துவிட்டு, ஒரிஜினல் ATM களையும் அதன் பின்களையும் உபயோகித்து இவர்கள் அதில் இருக்கும் பணத்தை எல்லாம் சுருட்டி விடுகின்றனர், இன்னொரு பக்கம் Cash Deposit மெசின்கல் இருக்கும் ATM களிலும் ஒரு நூதன ப்ஃராடு உலாவி வருகிறது,

அதாவது ATM க்கு வெளியில் பணம் எண்ணுவது போல உட்கார்ந்து கொண்டு இருப்பார்கள், கையில் ஒன்றிரண்டு பழைய எழுதிய நோட்டுகளை வைத்துக் கொண்டு, யாராவது பணம் எடுத்து விட்டு வெளியே வரும் போது, இந்த பணம் டெபாசிட் மெசினுக்குள் போகவில்லை, மாற்றி தாருங்கள் என்று அவர்களிடம் கள்ள நோட்டுகளை கொடுத்து நல்ல நோட்டை பெற்று விடுகின்றனர், பின்னர் ATM க்குள் செல்வது போல சென்று விட்டு பின்னர் தலைமறைவாகி விடுகின்றனர்,

" ஆதலால் ATM க்குள் உண்மையாகவே யாரேனும் உதவி கேட்டால் கூட தற்போது செய்வதற்கு மக்கள் அச்சப்படுகின்றனர், செய்யவும் வேண்டாம், பணத்தை மாற்றிக் கேட்டால் வங்கிகளுக்குள் சென்று மாற்றிக் கொள்ள சொல்லுங்கள், பணம் எடுக்க தெரியவில்லை என்றால் வங்கிகளில் இருக்கும் செக்யூரிட்டிகளிடம் மட்டும் உதவி கேளுங்கள் "