Mukesh Ambani Latest Update-இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி, தனது ரிலையன்ஸ் நிறுவத்தின் மூலம் Boeing 737 MAX 9 விமானத்தை வாங்கியுள்ளார். இது இந்தியாவில் முதல்முறையாகும்.
9 விமானங்களை ஏற்கனவே வைத்துள்ள அம்பானி, சொகுசு வாழ்க்கைக்கு பெயர் பெற்றவர். அவரது பிள்ளைகளின் திருமண விழாக்களுக்கான கலை நிகழ்ச்சிகள் நன்கு புகழ்பெற்றவை. மேலும், உலகின் பல நகரங்களில் அவருக்கு சொந்த குடியிருப்புகள் மற்றும் விமானங்கள் உள்ளன.
இந்நிலையில்,புதிய Boeing 737 MAX 9, இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர்களால் வைத்திருக்கும் மிகச் சில விமானங்களில் ஒன்று, தொழில்நுட்பத்தில் சிறந்ததாகவும் கருதப்படுகிறது. சமீபத்தில், விமானத்தின் சோதனை ஓட்டம் சுவிட்சர்லாந்தில் முன்னெடுக்கப்பட்டது, இதில் பாஸல், ஜெனிவா மற்றும் லண்டன் விமான நிலையங்களில் 6 முறை சோதனை நடைபெற்று, 2024 ஆகஸ்டு 27ம் தேதி டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கியது.
இந்த விமானத்தின் அடிப்படை விலை 118.5 மில்லியன் டாலர், ஆனால் தனிப்பட்ட மாற்றங்கள் காரணமாக, முகேஷ் அம்பானி குடும்பம் ரூ. 1,000 கோடிக்கும் அதிகமாக செலவிட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது. தற்போது, டெல்லி விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள Boeing 737 MAX 9, விரைவில் மும்பை விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும் என தெறிவிக்கப்படுகிறது.