Jet Blue Airlines -நியூயார்க்கில் இருந்து சாண்டியோகோ சென்ற ஜெட் ப்ளு பயணிகள் விமானம் ஒன்று, திடீர் என்று தீ அலாரம் அடித்ததால், தரையில் இருந்து கிட்ட தட்ட 32,000 அடி உயரத்தில் இருந்து 10 நிமிடத்திற்குள் தரையிறக்கப்பட்ட சம்பவம் ஒன்று அரங்கேறி இருக்கிறது.
ஜெட் ப்ளு பயணிகள் விமானம் ஒன்று நியூயார்க்கில் இருந்து சாண்டியாகோ செல்ல தயாராகி கொண்டு இருந்தது. விமானம் கிளம்பி கிட்ட தட்ட சாலினா நகரின் மேலே சென்று கொண்டு இருந்த போது, கார்கோ பகுதியில் ஏதோ, தீயோ புகையோ பரவுவதாக ஆட்டோமேட்டடு சிஸ்டம் பைலட்களுக்கு வார்னிங் கொடுத்து இருக்கிறது. அப்போது விமானம் தரையில் இருந்து கிட்ட தட்ட 32,000 அடி உயரத்தில் பறந்து கொண்டு இருந்தது. உடனடியாக உஷாரான விமானிகள் விமானத்தை அவசரம் அவசரமாக தரையிறக்க முற்பட்டனர்.
சாலினாவில் இருக்கும் சிறிய ஏர்போர்ட்டில் தரையிறக்க முடிவு செய்து விட்டு, விமானத்தை வேக வேகமாக இயக்கினர். 32,000 அடியில் இருந்து சீறி பாய்ந்து வந்த அந்த ஜெட் ப்ளு விமானம் 10 நிமிடத்திற்குள் சாலினா விமான நிலையத்தில் எந்த வித பாதிப்பும் இல்லாமல் தரையிறங்கியது. அங்கு ரெடியாக வைக்கப்பட்டு இருந்த பள்ளி பேருந்துகளின் உத்வியின் மூலம் பயணிகள் உடனடியாக அங்கு இருந்து அப்புறப்படுத்தப் பட்டனர். அங்கு இருந்த ஆய்வாள்ர்கள் மற்றும் பொறியாளர்கள், சிறுது நேரம் கழித்து விமானத்தை ஆய்வு செய்த போது, விமானத்தின் எந்த பகுதிகளிலும், தீயோ புகையோ எதுவும் இல்லை, அப்புறம் ஏன் அலாரம் அடித்தது என்பது குறித்தும் எந்த தகவலும் இல்லை. அலாரம் அடித்ததும் பயணிகளின் பாதுகாப்பு கருதி விமானத்தை தரை இறக்கியதாக விமானிகள் கூறி இருக்கின்றனர்.
ஏதேனும் தொழில்நுட்ப கோளாறுகளால் அலாரம் தவறாக அடித்து இருக்கலாம் என ஆய்வு செய்த ஆய்வாளர்களும் பொறியாளர்களும் கூறி இருக்கின்றனர். பாதுகாப்பு கருதி தான் என்றாலும் கூட 32,000 அடியில் இருந்து 10 நிமிடத்திற்குள் தரையிறங்கிய விமானத்திற்குள் இருந்த விமானிகளின் அந்த த்ரிலிங்கான நிலை என்பது எப்படி இருந்து இருக்கும் என யோசித்தால் நெஞ்சு பதை பதைக்க தான் செய்கிறது