• India
```

ரயில் டிக்கெட் முன்பதிவிற்கான...கால அவகாசம் குறைப்பு...!

IRCTC Reservation Day Limit Reduced

By Ramesh

Published on:  2024-10-18 09:15:09  |    495

IRCTC Reservation Day Limit Reduced - இந்திய ரயில்வே துறை, ரயில் டிக்கெட் முன்பதிவிற்கான கால அவகாசத்தை குறைப்பதாக ஒரு அறிக்கை விடுத்து இருக்கிறது அது குறித்து பார்க்கலாம்.

IRCTC Reservation Day Limit Reduced - உலகின் நான்காவது மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க்கை கொண்ட இந்திய ரயில்வே துறை, இந்தியாவில் இருக்கும் அனைத்து நகரங்களையும் இணைக்கும் வகையில், கிட்ட தட்ட 93,000 கி.மீ அளவிற்கு ரயில்வே ட்ராக்கை ஏற்படுத்தி இருக்கிறது, நாள் ஒன்றுக்கு இந்திய ரயில்வே துறை 23 மில்லியன் பயணிகளை கையாளுகிறது. உலகிலேயே அதிக நபர்கள் பணியாற்றும், அதிக பயணிகளை கையாளும் ரயில்வேக்களில் முதல் இடத்தில் இருக்கிறது இந்தியா.

நாள் ஒன்றுக்கு இந்தியாவில் ஆன்லைனில் பதிவு செய்யப்படும், முன்பதிவு டிக்கெட்டுகள் மட்டும் கிட்ட தட்ட 12 இலட்சங்களை தாண்டுகிறது, இதில் கவுண்டர்களில் எடுக்கப்படும் டிக்கெட் கணக்கில் வராது என்னும் போது, மொத்த முன்பதிவுகள் என்பது கிட்டதட்ட ஒன்றரை மில்லியன்களை தாண்டும் என அறியப்படுகிறது, இந்த நிலையில் தான் இந்திய ரயில்வே துறை, டிக்கெட் முன்பதிவில் ஒரு முக்கியமான மாற்றத்தை கொண்டு வந்து இருக்கிறது. 


அதாவது இதுவரை ரயில்வே முன் பதிவு டிக்கெட்டுகள் 120 நாட்களுக்கு முன்னதாகவே பதிவு செய்ய முடியும், அதாவது கிட்ட தட்ட நான்கு மாதங்களுக்கு முன்பாகவே உங்களது பயணத்தை முன்பதிவு செய்து கொள்ள முடியும், ஆனால் தற்போது அந்த கால அவகாசம் என்பது குறைக்கப்பட்டு, முன்பதிவிற்கான காலம் 60 நாட்கள் ஆக்கப்பட்டு இருக்கிறது. அதாவது உங்களது பயணத்திற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு மட்டுமே டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியும்.

" நவம்பர் 1 முதல், இந்த கால அவகாசம் குறைப்பு அமலுக்கு வர இருக்கிறதாம், இதற்கு முன்னதான புக்கிங்குகளுக்கு இந்த அமலால் எந்த பிரச்சனைகளும் இல்லையாம், நீங்கள் அக்டோபர் 31 வரையில் எப்படி வேண்டுமானாலும் முன்பதிவு செய்து கொள்ள இயலும், நவம்பர் 1 முதல் கால அவகாசம் குறைக்கப்பட்டாலும் முன்னதாக புக்கிங் செய்யப்பட்ட டிக்கெட்டுகளை கேன்சல் செய்யவோ, மாற்றவோ எந்த தடங்கல்களும் இல்லையாம் "