அமேசான் குடியரசு தின சிறப்பு விற்பனையில், ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு தள்ளுபடிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் ஐபோன் மாடல்களுக்கு குறிப்பாக ஐபோன் 15 மாடலுக்கு மிகப்பெரிய தள்ளுபடி கிடைத்து இருக்கிறது. இது தொடர்பான தகவலை இன்று பார்க்கலாம் வாங்க..
ஐபோன்களுக்கு மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த போன், விற்பனை விலை ரூ.69,900 ஆக இருந்தாலும், தள்ளுபடிகள் மூலம் விலையை ரூ.35,000க்குள் குறைக்கலாம் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?
குடியரசு தின சலுகையில் ஐபோன் 15 மாடல் ரூ.57,499க்கு கிடைக்கிறது. SBI கிரெடிட் கார்ட் பயன்படுத்தினால் ரூ 1000 தள்ளுபடி பெறலாம். மேலும் உங்கள் பழைய மொபைலை மாற்றி அதிகபட்சம் ரூ.22,800 வரை சேமிக்கலாம். மொத்தத்தில் ஐபோன் 15 ரூ.35,000க்கு பெற முடியம்.
கையில் மொத்த பணம் இல்லை என்றாலும், மாதத்திற்கு ரூ.2,788 இஎம்ஐ மூலம் ஐபோன் 15 வாங்கிக் கொள்ளலாம்.
ஐபோன் 15 அம்சங்கள்
A16 பயோனிக் சிப்செட்: மிகப்பெரிய செயல்திறன்
6GB ரேம், 512GB ஸ்டோரேஜ்
48MP + 12MP பின்புற கேமராக்கள்
12MP செல்ஃபி கேமரா