Intel Company Latest News- மெல்ல மெல்ல சரிந்து வரும் இண்டெல் நிறுவனத்தின் தயாரிப்பு குழுவை ஆட்கொள்ள நினைத்த ஆர்ம் நிறுவனத்திற்கு, அதெல்லாம் தருவதாக இல்லை என கறாராக பதிலடி கொடுத்து இருக்கிறது இண்டெல்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை மையமாக செயல்பட்டு வரும் இண்டெல் நிறுவனம், தற்கால போட்டிதனில் தாக்கு பிடிக்க முடியாமல் சர்வதேச அளவில் பெரும்பாலான பங்குகளை இழந்து வருகிறது. நிறுவனத்தை எப்படியேனும் ஈடுகட்ட, உலகளாவிய அளவில் 15,000 இண்டெல் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. அப்படியும் கூட இன்னும் அதளபாதாளத்தில் நிறுவனம் இருப்பதால், பல்வேறு முன்னனி நிறுவனங்கள் இண்டெலை ஆட்கொள்ள ரகசிய பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன.
ரகசியமாக நடந்த இரு நிறுவனத்திற்கு இடையேயான பேச்சு வார்த்தையில், இண்டெல் சுத்தமாக உடன்படவில்லையாம், ஆனால் ஆர்ம் நிறுவனம் தொடர்ந்து இண்டெல் நிறுவனத்தை டீலை ஏற்றுக் கொள்ள சொல்லி வற்புறுத்தியதாக தெரிகிறது. அது என்னவோ தயாரிப்பு குழுவிற்கு மட்டும் ஏன் ஆர்ம் நிறுவனம் குறி வைக்கிறது என்பது புரியாத புதிராக இருக்கிறது. அவர்களுக்கு சிப் உற்பத்தி செய்யும் துறை வேண்டாமாம், ஆனால் இண்டெல் நிறுவனத்தின் தயாரிப்பு குழு மட்டும் வேண்டுமாம், இந்த டீலை ஒட்டு மொத்தமாக ஆராயும் போது, இது டீல் போலவே தெரியவில்லை, இண்டெல் நிறுவனத்தை ஒட்டு மொத்தமாக கவிழ்க்கவும், தன் நிறுவனத்தை பலப்படுத்தவும் ஆர்ம் நிறுவனம் போடுகின்ற திட்டம் போல இருக்கிறது.
"உலகளாவிய அளவில் பிரபல சிப் நிறுவனமாக செயல்பட்டு வந்த இண்டெல் நிறுவனத்திற்கு இந்நிலை ஏற்படும் என்று யாருமே நினைக்கவில்லை, தற்கால போட்டிக்குள் மீண்டும் வந்து தன் நிலையை உலகளாவிய சிப் கம்பெனிகளுக்குள் நிச்சயம் உயர்த்திக் காட்டும் இண்டெல் "