India To Launch UPI In Maldives - இந்தியாவில் செயல்பட்டு வரும் UPI சேவையை, மாலத்தீவில் அறிமுகப்படுத்துவதற்காக, இரண்டு நாடுகளும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டு இருக்கின்றனர்.
India To Launch UPI In Maldives - உலகிலேயே அதிக அளவில் UPI சேவையை பயன்படுத்தும் நாடுகளுள் இந்தியா தற்போது முதன்மையான நாடாக திகழ்ந்து வருகிறது. இந்தியாவில் தினசரி 50 கோடிக்கும் மேல் UPI மூலம் பணபரிவர்த்தனைகள் நிகழ்கிறது, ஒரு வருடத்திற்கு என்னும் போது அது பல பில்லியன்களை தாண்டுகிறது, ஒரு 10 வருடத்திற்கு முன்பு வரை இந்தியாவில் நாள் ஒன்றுக்கு இலட்சம் ஆன்லைன் பரிவர்த்தனைகள் நடப்பதே வியப்பு தான், ஆனால் தற்போது பணபரிவர்த்தனை தினசரி பல கோடிகளை தாண்டி வருகிறது.
UPI பணவரித்தனையின் தாக்கம் என்ன?
UPI பணபரிவர்த்தனையை மிக மிக இலகுவாக்கி இருக்கிறது, எளியவர்களும் தற்போது ஆன்லைன் பரிவர்த்தனைகளை எளிதாக மேற்கொள்ள முடிகிறது, பணம் தற்போது டிஜிட்டலாக எளிதாக பயணிக்க ஆரம்பித்து விட்டதால் மக்களிடையேயான பண பரிவர்த்தனையும் அதிகமாகி இருக்கிறது. இது மக்களின் வாழ்வாதாரத்திலும் சரி, இந்திய பொருளாதாரத்திலும் சரி, மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
மாலத்தீவில் இந்திய UPI
சமீபத்தில் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய் ஷங்கர் அரசு முறை பயணமாக மாலத்தீவு வரை சென்று இருந்தார், மாலத்தீவில் இந்திய UPI சேவை அறிமுகப்படுத்தும் விதமாக, இந்தியாவும் மாலத்தீவு அரசும் ஒரு புதிய புரிந்துணவுர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டு இருக்கின்றனர். இந்திய UPI சேவையை தடையின்று மாலத்தீவு முழுவதும் செயல்படுத்துவதற்காக மாலத்தீவின் அதிபர் மொய்சு ஒரு கூட்டமைப்பை உருவாக்கி இருக்கிறார். மாலத்தீவில் செயல்படும் டிரேட் நெட் நிறுவனம் இந்த கூட்டமைப்பிற்கு தலைமை தாங்குகிறது.
வருகின்ற 2025 ஜனவரிக்குள் மாலத்தீவு முழுமையிலும் இந்திய UPI சேவை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதற்கான பணிகளும் வேகமாக நடைபெற்று வருவதாக தகவல், இந்திய UPI மாலத்தீவில் கால் பதிக்கும் பட்சத்தில் அங்கு பணப்பரிவர்த்தனைகள் இலகுவாகும், பணப் புழக்கம் டிஜிட்டல் ஆவது அதிகமாகும், சுற்றுலா பயணிகளுக்கான சிரமங்கள் குறையும், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் பெருகும், மாலத்தீவு பொருளாதார ரீதியாக வேகமாக வளரும்.