• India
```

மீண்டும் இந்தியாவில் லேப்டாப் இறக்குமதிகளுக்கு கட்டுப்பாடு...!

India Is Poised To Impose Limitations On Laptop Imports

By Ramesh

Published on:  2024-10-19 03:53:26  |    273

India Is Poised To Impose Limitations On Laptop Imports - இந்தியாவில் லேப்டாப், கம்ப்யூட்டர் மற்றும் அதன் உதிரிபாகங்கள் இறக்குமதிக்கு ஒன்றிய அரசு ஒரு சில கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது.

India Is Poised To Impose Limitations On Laptop Imports - இந்தியாவில் ஏற்கனவே லேப்டாப், கம்ப்யூட்டர் மற்றும் அது சம்பந்தப்பட்ட எலக்ட்ரானிக் டிவைஸ்கள்  வெளிநாடுகளில் இருந்து  இறக்குமதி செய்யப்படுவதற்கு கட்டுப்பாடு விதித்து, ஒன்றிய அரசு அதை திரும்ப பெற்று இருந்தது, அதாவது ஒன்றிய அரசு கடந்த ஆகஸ்ட் 2023 அன்று லேப்டாப், கம்ப்யூட்டர் மற்றும் அதன் உதிரிபாகங்கள் இறக்குமதிகளுக்கு கட்டுப்பாடு விதித்து இருந்தது, ஆனால் பின்னர் ஒரு சில காரணங்களுக்காக அதை விதித்த இரண்டு மாதங்களிலேயே அக்டோபர் 2023 யில் திரும்ப பெற்றது.

தற்போது மீண்டும் இறக்குமதிகளுக்கு கட்டுப்பாடு விதிக்க போவதாக ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இதற்கு என்ன காரணம் என்று விசாரித்த போது, இந்தியாவில் செயல்படும் லேப்டாப், கம்ப்யூட்டர் மற்றும் அதன் உதிரிபாகங்களை தயாரிக்கும் இந்திய நிறுவனங்களை ஊக்குவிக்கப்பதற்காவும், தேசத்தின் ஒருமித்த பாதுகாப்பு கருதியும், அரசின் எலக்ட்ரானிக் ஆவண பாதுகாப்பிற்காவும் மீண்டும் அந்த நடவடிக்கையை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் ஒன்றிய அரசு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


இது போக சீனாவில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் லேப்டாப்கள் மற்றும் கம்ப்யூட்டர் உதிரிபாகங்களின் அளவை முற்றிலுமாக நிறுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறதாம், இனிமேல் அங்கீகரிக்கப்பட்ட முறையாக, இந்திய அரசிடம் இறக்குமதி லைசென்ஸ் பெற்ற நிறுவனங்கள் மட்டுமே இந்தியாவில் லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர் உதிரிபாகங்களை இறக்குமதி செய்ய முடியும் என ஒன்றிய அரசு கறாராக அறிவித்து இருக்கிறது.

சரி, ஏன் மீண்டும் இந்த நடவடிக்கை

அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளின் முக்கியமான அலுவலகங்களில் இறக்குமதி செய்யப்பட்ட கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் சம்பந்தப்பட்ட டிவைஸ்கள் மூலம் அந்த அலுவலகங்களின் டேட்டாக்கள் திருடப்பட்டதாக ஒரு தகவல் கசிந்தது, இதனை கருத்தில் கொண்டே இந்திய அரசு ஒரு முன்பாதுகாப்பு நடவடிக்கையாக இறக்குமதிகளுக்கு கட்டுப்பாடு விதித்து இருக்கிறது. இந்த கட்டுப்பாடு ஜனவரி 1, 2025 முதல் தேசம் முழுக்க அமலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.