• India
```

2035 யில்..உலகிலேயே மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக...இந்தியா இருக்கும்...!

How Will India Be In 2035

By Ramesh

Published on:  2024-10-18 04:03:26  |    430

How Will India Be In 2035 - 2035 யில் இந்தியா அனைத்து நிலைகளிலும் எப்படி இருக்கும் என அமெரிக்காவின் பிரபல பொருளாதார நிறுவனம் ஒன்று கணித்து இருக்கிறது, அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

How Will India Be In 2035 - உலகளாவிய அளவில் தொடர்ந்து வளரும் நாடுகள் வரிசையிலேயே பல வருடங்களாக இருந்து கொண்டு இருக்கிறது இந்தியா, ஏன் இந்தியாவை வளர்ந்த நாடாக அறிவிக்க முடியவில்லை என்பதற்கு பல காரணங்கள் இருக்கிறது, இன்னும் இந்தியா பல துறைகளில் தன்னிறைவு பெற வேண்டிய அவசியம் இருக்கிறது, இன்னுமே பல அத்தியாவசியங்களுக்கு நாம் பிற நாடுகளைச் சார்ந்து இருப்பது தான், இன்னும் வளரும் நாடுகள் வரிசையிலேயே இருப்பதற்கு காரணம் ஆக கூறப்படுகிறது.

சரி, நிறுவனம் கொடுத்த அறிக்கை என்ன?

2035 யில் இந்தியா உலகிலேயே மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும் என பிரபல பொருளாதார நிறுவனம் ஒன்று கணித்து இருக்கிறது, உலகின் மிகப்பெரிய நிறுவனங்கள் அனைத்தும் இந்தியாவில் கூடாரமிட வாய்ப்பு இருக்கிறதாம், 2035 யில் இந்தியாவின் ஒவ்வொரு நகரிலும் 15,000 கார்கள் இப்போது இருப்பதை விட அதிகமாக ஓடுமாம். இந்தியாவில் ஒரு நாள் கச்சா எண்ணெய் தேவை 30 இலட்சம் பேரல்கள் ஆக அதிகரிக்குமாம். மக்கள் தொகையில் முதல் இடத்தை பிடித்து இருக்கும்.


இந்தியாவின் மின் தேவை இப்போது இருப்பதை விட 10 மடங்கு அதிகரிக்குமாம், மெக்ஸிகோ நாட்டின் மொத்த மின்சார தேவை என்பது, இந்தியாவில் இருக்கும் ஏசிகளுக்கு மட்டும் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு சமமாக இருக்கும், விண்வெளி துறையில் அபரித வளர்ச்சியை பெற்று இருக்குமாம், உற்பத்தி துறையில் 225 சதவிகிதம் இந்தியா வளர்ச்சியை பெற்று இருக்குமாம், அதே சமயத்தில் இந்தியாவின் முதுகெலும்பாக அறியப்படும் விவசாயம் என்பது 25 சதவிகிதம் அழிந்து போய் இருக்குமாம்.

" உலகளாவிய நாடுகளுக்கு இந்தியா மிகப்பெரிய சந்தையாக இருக்கிறது, ஆதலால் இந்தியா மிகப்பெரிய பொருளாதார நாடு ஆகும் என்பதி எந்த வித ஐயமும் இல்லை, ஆனால் ஒரு காலத்தில் இந்தியாவின் முதுகெலும்பாக அறியப்பட்ட விவசாயம் 25 சதவிகிதம் அழியும் என்பதையும் தேசம் கருத்தில் கொள்ள வேண்டும், விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும், விவசாய பொருள்களுக்கு சந்தைகளில் நல்ல விலை கிடைக்க வேண்டும், விவசாயமும் வளர வேண்டும், பொருளாதாரமும் வளர வேண்டும் அவ்வளவு தான் "