இன்றைய ஆபரண மார்க்கெட் நிலவரத்தின்படி, தமிழகத்தில், தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்து இருக்கிறது. தொடர்ந்து எகிறி வரும் தங்கத்தின் விலையால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்து இருக்கின்றனர்.
நேற்றைய தினம் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஆபரண மார்க்கெட்டுகளில் கிராமிற்கு, ரூபாய் 7,060 என்று இருந்த நிலையில், இன்று ரூபாய் 40 அதிகரித்து கிராம் 7,100-க்கு விற்கப்படுகிறது. மேலும் 18 காரட் தங்கம் ரூபாய் 5,809/ கிராம் எனவும், 24 காரட் தூய தங்கம் ரூபாய் 7,745/ கிராம் எனவும் விற்கப்படுகிறது.
வெள்ளி நேற்றைய தினம் கிராமிற்கு ரூபாய் 101 என இருந்த நிலையில், இன்று ஒரு ரூபாய் உயர்ந்து கிராம் 102 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெள்ளியின் விலை எல்லாம் இந்த உயரத்தை தொடும் என்று நகை விற்பனையாளர்களே எதிர்பார்க்கவில்லையாம்.
" உலகளாவிய அளவில் தற்போது தங்கத்தை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் தங்கம், வைரம், ரத்தினங்கள் குறைந்து, தங்கத்தின் இறக்குமதி அதிகரித்ததே தங்கத்தின் இந்த விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது "