Gold News Today-சர்வதேச அளவில் பார்க்கும் போது, இந்தியாவில் மட்டும் தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டு இருக்கிறது அதற்கான காரணங்கள் என்ன என்ன என்பதை இந்த தொகுப்பில் முழுமையாக விரிவாக பார்க்கலாம்.
உலகளாவிய அளவில் அசாதரண சூழல்
ரஷ்யா, உக்ரைன், பாலஸ்தீனம், சிரியா உள்ளிட்ட பல முக்கிய நாடுகளில் போர் பதற்றம் என்பது தொடர்ந்து நீடித்து வருகிறது. தொடர்ந்து அங்கு அசாதாரண சூழல் நிலவுவதால், சர்வதேச மார்க்கெட்டுக்கள் அனைத்தும் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு சரிந்து தான் கிடக்கிறது. சர்வதேச மார்க்கெட்டுக்களின் இந்த மிகப்பெரிய வீழ்ச்சி தான், இந்தியாவில் தங்கம் கணிசமாக உயர்வதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
உலகளாவிய அளவில் 60 நாடுகளில் தேர்தல்
சர்வதேச அளவில் பல நாடுகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதனால் பல நாடுகளில் தங்க இறக்குமதிக்கும், ஏற்றுமதிக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் ஒட்டு மொத்தமாக உலகளாவிய அளவில் தங்கத்தின் ஏற்றுமதி, இறக்குமதி என்பது வெகுவாக சரிந்து இருக்கிறது. இந்த சர்வதேச வீழ்ச்சியை சரிகட்ட, தங்கம் ஆனது, இந்தியா உள்ளிட்ட பல டிமாண்ட் உள்ள நாடுகளில் விலையேற்றத்தை சந்தித்து வருகிறது.
தேசத்தில் தங்கத்தின் தேவை அதிகம்
உலகின் பல நாடுகளில் தங்கத்தின் ஏற்றுமதி, இறக்குமதி என்பது வெகுவாக குறைந்து இருக்கும் போது, இந்தியாவில் மட்டும் தங்கத்தின் டிமாண்ட் அதிகரித்து கொண்டே இருக்கிறது. பொதுவாக இந்தியாவில் அனைத்து சுப நிகழ்ச்சிகளும் தங்கம் இல்லாமல் இல்லை என்பதால், தினம் தினம் தங்கத்தின் தேவை என்பது தேசத்தில் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது, அதனால் தான் சர்வதேச அளவில் தங்கத்தின் ஏற்றுமதி, இறக்குமதி குறைந்து இருந்தாலும் கூட, இந்தியாவில் தங்கத்தின் விலை என்பது தொடர்ந்து தாறு மாறாக எகிறிக் கொண்டே இருக்கிறது.
" முதன் முறையாக ஆபரணத்தங்கத்தின் விலை கிராமிற்கு 7,000 ரூபாயை தொட்டு இருக்கும் நிலையில், தங்கத்தின் விலை இன்னும் ஒரு மாதத்திற்கு ஏறு முகமாக தான் இருக்கும் என்கின்றனர், பொருளாதார வல்லுநர்கள் "