Gold News Today-இன்றைய ஆபரண மார்க்கெட் நிலவரத்தின்படி, தமிழகத்தில், தங்கத்தின் விலை ஆனது, வரலாறு காணாத உயர்வை கண்டு இருக்கிறது.
நேற்றைய தினம் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஆபரண மார்க்கெட்டுகளில் கிராமிற்கு, ரூபாய் 7,000 என்று இருந்த நிலையில், இன்று 60 ரூபாய் வீதம் உயர்ந்து, ஒரு கிராம் ஆபரணத்தங்கம், ரூபாய் 7,060-க்கு விற்கப்படுகிறது. மேலும் 18 காரட் தங்கம் ரூபாய் 5,776/ கிராம் எனவும், 24 காரட் தூய தங்கம் ரூபாய் 7,702/ கிராம் எனவும் விற்கப்படுகிறது.
வெள்ளி நேற்றைய தினம் கிராமிற்கு ரூபாய் 98 என இருந்த நிலையில், இன்று மூன்று ரூபாய் உயர்ந்து, கிராம் 101 -க்கு விற்கப்படுகிறது. வரலாற்றில் வெள்ளியின் விலை முதன் முறையாக சதத்தை கடந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச அளவில் நீடிக்கும் அசாதாரண சூழ்நிலைகள், இறக்குமதி வரி குறைவால், இந்தியாவில் பெருகும் தங்கத்தின் டிமாண்ட் ஆகியவற்றால் தொடர்ந்து இந்திய மார்க்கெட்டுகளில் தங்கம் மற்றும் வெள்ளி வரலாறு காணாத உயர்வை சந்தித்து வருகிறது