Fengal Cyclone: Thousands Of Trucks Stopped Outside Of Chennai - சென்னையில் காற்றும் மழையும் கொட்டி தீர்த்து வரும் நிலையில் பெரும்பாலான சரக்கு லாரிகள் நெடுஞ்சாலைகளில் முடங்கி கிடக்கின்றன.
காய்கறிகள், பெட்ரோல், டீசல், ஆட்டோமொபைல் பொருள்கள், பால், ரேசன் பொருள்கள் என பலவற்றை சுமந்து செல்லும் சரக்கு லாரிகள் என்பதால் சென்னைக்கு செல்ல வேண்டிய பொருள்களும் முடங்கி கிடக்கின்றன, லாரி டிரைவர்கள் பலரும் சாப்பிட உணவில்லாமல் கிடைக்கின்றனர், சரக்கு லாரியில் இருக்கும் காய்கறிகள் எல்லாம் நனைந்து அழுகும் வாய்ப்பு இருப்பதால் ஏற்றி விட்ட விவசாயிகளின் நிலையும் கவலைக்குரியதாக மாறி இருக்கிறது.
கோயம்பேடு மார்க்கெட்டுகளிலும் காய்கறி வரத்து வெகுவாக சரிந்து இருக்கிறது, பால் இருப்பு பெரும்பாலான இடங்களில் தட்டுப்பாடாக இருக்கிறது, அரசு சார்பில் 24 மணி நேரங்களிலும் ஆவின் பாலகங்கள் செயல்படும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது, மாநகராட்சிகள் சார்பில் வீடு வீடுகளாக சென்று காய்கறிகள் வழங்கும் செயல்பாடுகளும் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.