Exemption From Toll Paying - இனிமேல் டோல் கட்டணம் கட்டத் தேவையில்லை என ஒரு மாநிலம் அறிவித்திருக்கிறது அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Exemption From Toll Paying - நாள்தோறும் வாகன ஓட்டிகள் தேசிய நெடுஞ்சாலைகளில் சந்திக்கும் ஒரு மிகப்பெரிய இடராக பார்க்கப்படுகிறது சுங்கச்சாவடிகள், சாலைகளில் எந்தவித மேம்பாடும் செய்யாமல் தொடர்ந்து கட்டணங்களை மட்டும் சுங்கச்சாவடிகள் வசூலித்துக் கொண்டே வருவதாக வாகன ஓட்டிகள் பல மாநிலங்களிலும் புகார் அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தான் மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வர் ஏக் நாத் ஷிண்டே ஒரு புதிய அட்டகாசமான திட்டத்தை மாநிலத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறார். அதாவது மும்பையில் இருக்கும் ஒரு ஐந்து முக்கியமான சுங்கச்சாவடிகளில் இனி இலகு ரக வாகனங்கள் எந்தவித சுங்கச்சாவடி கட்டணமும் கட்டத் தேவையில்லை என்பது தான் அந்த அறிவிப்பு.
இனி மும்பை நகருக்குள் நுழையும் இலகுரக வாகன ஓட்டிகள் தாஹிசார், முலுண்ட், வாஷி, அய்ரோலி மற்றும் தின்ஹாந்த் நாகா உள்ளிட்ட ஐந்து சுங்குச்சாவடிகளில் எந்தவித கட்டணமும் கட்ட தேவையில்லை. இதற்கு முன்னர் இலகு ரக வாகனங்களுக்கு ரூபாய் 45 வரை வசூலிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது, தற்போது அதற்கு விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
எதிர்க்கட்சிகள் இந்த சுங்கச்சாவடி விலக்கு குறித்து கூறும் போது இது முழுக்க முழுக்க தேர்தலுக்கான முன்னறிவிப்பு என்று கூறி வருகின்றனர், கார்கள் சுங்கச்சாவடியில் நில்லாது செல்லும்போது மும்பை மாநகரில் நிலவும் போக்குவரத்து நெரிசல் இதனால் குறையலாம் இதன் காரணமாகவே இந்த சுங்கச்சாவடி விலக்கு அறிவிக்கப் பட்டிருப்பதாக முதல்வர் தரப்பு கூறியிருக்கிறது.