EIB Allocate 300 Million Euro For Bengaluru Railway Projects - பெங்களுரு நகரத்தின் பல்வேறு புறநகர் பகுதிகளை இணைக்கும் ரயில்வே திட்டத்திற்கு 300 மில்லியன் யூரோ வழங்குவதாக ஐரோப்பிய முதலீட்டு வங்கி ஒப்புதல் அளித்து இருக்கிறது.
EIB Allocate 300 Million Euro For Bengaluru Railway Projects - 1993 முதல் ஐரோப்பிய முதலீட்டு வங்கி தொடர்ந்து இந்தியாவில் பல்வேறு திட்டங்களுக்கு கடனுதவி வழங்கி வருகிறது, ஏற்கனவே ஆக்ரா, கான்பூர், லக்னோ, புனே உள்ளிட்ட பல நகரங்களின் புதிப்பிக்கதக்க ஆற்றல் மூல திட்டங்கள், மெட்ரோ திட்டங்கள் உள்ளிட்டவைகளுக்கு ஐரோப்பிய முதலீட்டு வங்கி நிதி உதவி அளித்து இருக்கிறது, இதுவரை ஐரோப்பிய முதலீட்டு வங்கி இந்தியாவின் பல முக்கிய திட்டங்களில் 46,500 கோடி வரை முதலீடு செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது பெங்களுரு நகரின் பல்வேறு புறநகர் பகுதிகளை இணைக்கும் புறநகர் ரயில்வே திட்டத்திற்கு 300 மில்லியன் யூரோக்களை ஐரோப்பிய முதலீட்டு வங்கி வழங்குவதாக ஒப்புதல் அளித்து இருக்கிறது, இத்திட்டம் 149 கி.மீ தூரங்களுக்கு ரயில்வே லைன், 58 ரயில்வே நிலையங்கள், 2 பணிமனைகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக கருதப்படுகிறது, இத்திட்டத்தின் மூலம் பெரும்பாலான புறநகர் பகுதிகள் இணைக்கப்படும் எனவும் ஐரோப்பிய முதலீட்டு வங்கி தகவல் விடுத்து இருக்கிறது.
இந்த ரயில்வே லைன் அமையும் பட்சத்தில் பெரும்பாலான பெங்களுரு சாலைகளில் சாலை நெரிசல் குறைய வாய்ப்பு இருக்கிறது, இத்திட்டத்தின் மூலம் தற்போது பெங்களுருவில் இருக்கும் காற்று மாசுபாடு என்பது 43 சதவிகிதம் குறைய வாய்ப்பு இருப்பதாக எதிர் பார்க்கப்படுகிறது, க்ரீன் ஹவுஸ் வாயு உமிழ்வு பெருவாரியாக கட்டுப்படுத்தப்படும், எப்படி சென்னையில் மெட்ரோ அதிகரித்த பகுதிகளில் எல்லாம் சாலை நெரிசல் படிப்படியாக குறைந்ததோ அது போல பெங்களூருவிலும் ரிசல்ட் தெரியும் என்கின்றனர்.
இந்த ஒட்டு மொத்த பிராஜக்டும் முடிய இன்னும் 5 வருடங்கள் ஆகலாம் என கூறப்படுகிறது, 2029 யின் இறுதியில் இந்த திட்டம் செயலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது, முதல் ஆண்டில் நான்கு இலட்சம் பயணிகள் என்ற இலக்கை இந்த புறநகர் ரயில்வே திட்டம் கையாளும் என எதிர்பார்க்கப்படுகிறது, 2040 ஆம் ஆண்டிற்கு 1.5 மில்லியன் பயணிகளை இந்த புறநகர் ரயில்வே திட்டம் கையாளும் என எதிர்பார்க்கப்படுகிறது.