• India
```

அபரீத வளர்ச்சியில் தமிழகம்...பொருளாதாரத்தில் தொடர்ந்து முன்னேற்றம்...!

Economic Growth Of Tamil Nadu

By Ramesh

Published on:  2024-10-25 16:40:17  |    202

Economic Growth Of Tamil Nadu - கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் தமிழகம் அபரீத பொருளாதார வளர்ச்சியை அடைந்து இருக்கிறது அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Economic Growth Of Tamil Nadu - சேவை, உற்பத்தி, விவசாயம் என்ற மூன்று துறைகள் தான் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை நிர்ணயிக்கின்றன, அந்த வகையில் சேவை துறையை நம்பி தான் தமிழகத்தின் 54 சதவிகித பொருளாதாரம் என்பது இருக்கிறது, சேவை என்பது டிரான்ஸ்போர்ட், மருத்துவம், வங்கிகள், ஊரக வளர்ச்சி சேவைகள் உள்ளிட்டவைகளை உள்ளடக்கியது, உற்பத்தி துறையை நம்பி தமிழகத்தின் 33 சதவிகித பொருளாதாரம் என்பது இருக்கிறது.

உற்பத்தி என்பது தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை உள்ளடக்கியதாக இருக்கிறது, அடுத்ததாக விவசாய துறையை சார்ந்து தமிழகத்தின் 13 சதவிகித பொருளாதாரம் என்பது இருக்கிறது, ஒட்டு மொத்தமாக இந்த மூன்று துறைகள் தான் தமிழகத்தின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் ஆகப்பெரும் சக்திகளாக இருக்கின்றன, அதில் சேவை துறை மட்டுமே கிட்டதட்ட 50 சதவிகித பொருளாதாரத்தை நிறைவு செய்கிறது.


இந்த நிதி ஆண்டில் தமிழகத்தின் வளர்ச்சி

கடந்த 2012 முதல் 2021 வரையிலான காலக்கட்டத்தில் தமிழகத்தின் சராசரி பொருளாதார வளர்ச்சி என்பது 5.80 சதவிகிதமாக தான் இருந்தது, ஆனா கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சராசரி பொருளாதார வளர்ச்சி என்பது 8.08 சதவிகிதமாக அதிகரித்து இருக்கிறது, இந்த நிதி ஆண்டில் அதாவது 2023-24 காலக்கட்டத்தில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி என்பது 8.23 சதவிகிதமாக இருக்கிறது.

ஒரு காலக்கட்டத்தின் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியில் பெரிதும் பங்கு வகிப்பது விவசாயமாக தான் இருந்தது, கிட்டதட்ட 60 சதவிகிதத்திற்கும் மேலான பொருளாதாரத்தை விவசாயம் உள்ளடக்கி இருந்தது, ஆனால் உற்பத்தி மற்றும் சேவை துறைகள் இன்று விவசாயத்தை பின்னுக்கு தள்ளி அபரீத வளர்ச்சி அடைந்து வருகின்றன, பொருளாதார வளர்ச்சி மகிழ்வை தந்தாலும், விவசாயத்தின் தாழ்வு வருத்தத்தை தான் தருகிறது.