• India
```

கொரோனோ காலங்களில் இயக்கப்படாத ஆம்னி பேருந்துகளுக்கு சாலை வரி விதிக்க கூடாது - உயர் நீதிமன்றம்!

Do Not Impose Road Tax On Omni buses : High Court

By Ramesh

Published on:  2024-10-18 04:39:57  |    680

Do Not Impose Road Tax On Omni buses : High Court - கொரோனா காலங்களில் இயக்கப்படாத ஆம்னி பேருந்துகளுக்கு தமிழக அரசு விதித்த சாலைவரியை திரும்ப பெற கோரி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது.

Do Not Impose Road Tax On Omni buses : High Court - 2019 யின் இடைப்பகுதி முதல் 2022 யின் கடைசி வரை தமிழகத்தில் கொரோனோ பாதிப்பு என்பது தொடர்ந்து இருந்து வந்தது, கிட்ட தட்ட இந்த காலக்கட்டத்தில் பல நிறுவனங்கல் பெரும் பொருளாத இழப்பை சந்தித்து வந்தன,அவற்றுள் ஒன்று ஆம்னி பேருந்து இயக்ககங்கள், அரசு ஒரிரு பேருந்துகளுக்கு 50 சதவிகிதம் பயணிகளுடன் அனுமதி வழங்கி இருந்தாலும் கூட, 50 சதவிகிதம் மட்டுமே பயணிகள் பயணிக்க முடியும் என்பதால் அது வருமான இழப்பு தான் என்று கருதி பெரும்பாலான பேருந்துகள் போக்குவரத்தையே நிறுத்தி வைத்தன.

ஆனால் தமிழக அரசோ அந்த காலக்கட்டத்திலும் கூட இயங்காத ஆம்னி பேருந்துகளுக்கும் சாலை வரி விதித்து இருந்தது, அதாவது ஒவ்வொரு 90 நாளுக்கும் சாலைவரி என்பது கிட்ட தட்ட ஒரு இலட்சத்து ஐம்பதாயிரத்தை தாண்டும், கொரோனோ காலத்தில் பெரும் இழப்பை சந்தித்து இருந்த ஆம்னி பேருந்துகளால், எப்படி இயங்காத பேருந்துக்கு சாலைவரி கட்ட முடியும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தமிழக அரசிடம் கேள்வி எழுப்பி வந்தனர்.


இந்த நிலையில் இந்த விவகாரம் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் மூலம் உயர் நீதிமன்றத்திற்கு வந்தது, வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பக்கம் நியாயம் இருப்பதாகவும் சாலைகளில் இயங்காத ஆம்னி பேருந்துகள் எப்படி அரசுக்கு சாலை வரி கட்ட முடியும் என்றும் விதிக்கப்பட்ட சாலைவரியை அரசு திரும்ப பெற வேண்டும் எனவும் தீர்ப்பு அளித்து இருக்கிறார்.

" 2021 அக்டோபர் முதல் 2022 டிசம்பர் வரை இயங்காத எந்த பேருந்திற்கும் அரசு சாலை வரி விதிக்க முடியாது, ஆம்னி பேருந்துகளின் கோரிக்கையை அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும், ஓடாத பேருந்துக்கும், சாலையை உபயோகிக்காத பேருந்துக்கும் எந்த வகையிலும் வரி விதிப்பது நியாயம் ஆகாது என நீதிபதி உத்தரவு இட்டு இருக்கிறார் "