Digital Pirates Earn RS 22,400 crore Annually By Piracy - பைரசி மூலம் இணைய திருட்டாளர்கள் ஒரே வருடத்தில் ரூ 22,400 கோடி வரை சம்பாதித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பைரசி என்பது என்ன?
புதிய படங்கள், டிஜிட்டல் ஒளிபரப்புகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இவை அனைத்தையும் எந்த வித காபி ரைட்ஸ்சும் பெறாமல், எந்த வித அனுமதியும் பெறாமல், இணையத்தில் எளிதாக கசிய விடும் நிகழ்விற்கு பெயர் தான் பைரசி என்று அழைக்கப்படுகிறது, இந்த இணையத்திருட்டை, பைரசியை கையாள்பவர்கள் பொதுவாக பைரேட்டுகள் என்று அழைக்கப்படுகின்றனர்.
பைரசியின் மூலம் 22,500 கோடி வருமானம்?
இந்தியாவில் நடக்கும் இணைய திருட்டுகள் மூலம், கடந்த ஒரு ஆண்டில் மட்டும் பைரேட்டுகள் 22,500 கோடி ரூபாய் வரை சம்பாதித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது, இதனால் இந்திய அரசுக்கு கிட்டதட்ட 4,300 கோடி ரூபாய் வரி இழப்பும் ஏற்பட்டு இருக்கிறதாம், முக்கியமாக இந்த பைரசி பொழுது போக்கு துறைக்கு மிகவும் அச்சுருத்தலாக இருக்கிறது.
தற்போதெல்லாம் ஒரு படம் வெளியான அந்த நாளே பைரசி மூலம் அதன் பதிப்பு இணையத்தில் கசிகிறது, இதனால் பட நிறுவனங்களும் சரி, தியேட்டர் நிறுவனர்களும் சரி பெரிதாக பாதிக்கப்படுகின்றனர், பொதுவாக ஒரு குடும்பம் தியேட்டருக்கு ஒரு படத்திற்கு செல்ல குறைந்த பட்சம் ரூ 2000 வரை செல்வாகிறது, ஓடிடி தளம் என்றால் வருடத்திற்கு ரூ 2000, ஆனால் பைரசியில் பதிப்பை பெற ஒரு 1GB நெட் இருந்தால் போதுமானதாக இருக்கிறது.
இந்த நார்மலான மனிதர்களின் எண்ணம் தான் பைரேட்டுகளின் முதலீடாக இருக்கிறது, கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 13,700 கோடி ரூபாய் மதிப்பிலான படங்கள் தியேட்டர்களில் இருந்து திருடப்பட்டு இருக்கிறது, 8,700 கோடி ரூபாய் மதிப்பிலான டிஜிட்டல் பதிப்புகள் திருடப்பட்டுள்ளன, ஒட்டு மொத்தமாக பைரசி மூலம் கிட்டதட்ட 22,500 கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெற்று இருக்கிறது, அடுத்த ஆண்டுகள் இது 50,000 கோடி ரூபாய் வர்த்தமாக மாறும் அபாயமாகவும் இருக்கிறதாம்.