Consumer Confidence Index India-அமெரிக்காவின் பிரபல நிறுவனம் ஒன்று நுகர்வோர்கள் இடையே நடத்திய கருத்துக்கணிப்பில், கடந்த ஆகஸ்ட் மாதத்தை காட்டிலும் செப்டம்பரில் நுகர்வோர் நம்பிக்கை குறியீட்டில் அமெரிக்கா வெகுவாக சரிந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சரி, அமெரிக்காவின் நுகர்வோர் நம்பிக்கை குறியீடு சரிந்ததற்கான காரணம் என்ன?
அமெரிக்காவின் பிரபலமான நிறுவனம் ஒன்று நடத்திய கருத்துக் கணிப்பில் கடந்த 3 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு, அமெரிக்காவின் நுகர்வோர் நம்பிக்கை குறியீடு வெகுவாக சரிந்து இருக்கிறது. கடந்த மாதம் நம்பிக்கை குறியீடு 105.6 ஆக இருந்த நிலையில், செப்டம்பரில் 98.7 ஆக வெகுவாக சரிந்து இருக்கிறது. சரி இந்த சரிவிற்கு என்ன காரணமாக இருக்கும்.
பொதுவாக அமெரிக்க நுகர்வோர்கள் எல்லாம் தற்போது பெரும் குழப்பத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக இருந்த பொருளாதார நிலை தற்போது சாமானிய மக்களிடையே இல்லாதது தான் இந்த சரிவிற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. நிலையில்லாத வேலை, முதலீடுகளில் சரிவு, தொழில்களில் பெரிதாக இல்லாத முன்னேற்றம், அதீதமான பெர்சனல் வரிகள் இவை எல்லாம் தான் நுகர்வோர்களை வெகுவாக பாதித்து இருப்பதாக கூறப்படுகிறது. தனி மனிதர்களின் சராசரி சம்பளமும் அமெரிக்காவில் வெகுவாக சரிந்து இருப்பதாக கூறப்படுகிறது. 35-54 வயதுக்கு உட்பட்ட பெரும்பாலானோரின் சம்பளம், தற்போது வருடத்திற்கு ஐம்பதாயிரம் டாலருக்கும் குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவை பொறுத்தவரை குறைந்த பட்சம் வருடத்திற்கு 75,000 டாலர் சம்பாதிக்கும் நுகர்வோர்களே தன்னிறைவு பெற்றவர்களாக கருதப்படுகிறார்கள். ஆனால் சம்பள விகிதம் அதை விட குறைந்து இருப்பதும் நுகர்வோர் நம்பிக்கை குறியீட்டில் அமெரிக்கா பின்னோக்கி சென்று இருப்பதற்கு காரணமாக கூறப்படுகிறது.
நுகர்வோர் நம்பிக்கை குறியீட்டில், 2010-24 காலக்கட்டத்தை கணக்கிடும் போது, இந்தியா சராசரியாக 91.02 புள்ளிகளை பெற்று இருக்கிறது. ஆசிய அளவில் பார்க்கும் போது இந்தியா நுகர்வோர் தன்னிறைவில் இரண்டாவது இடத்தை பெற்று இருக்கிறது. சிங்கப்பூர் முதலிடத்தை பெற்று இருப்பதாக தகவல்